தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 12, 2022, 3:41 PM IST

ETV Bharat / international

ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி எதிரொலி: ஆன்லைன் வர்த்தக சேவைகள் நிறுத்தம்!

ஆப்கானிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து ஆன்லைன் வர்த்தக சேவைகளும் நிறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

online
online

காபூல்: ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி ஓராண்டு கடந்துவிட்டது. தாலிபான்கள் ஆட்சி அமைத்த உடனேயே, ஏராளமான மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றனர்.

பெண்கள் சுதந்திரம், வேலைவாய்ப்பு, பெண் கல்வி உள்ளிட்டவற்றில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்குச் சென்றது. வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதியுதவிகள் குறைந்ததால், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. வறுமை, உணவுப்பஞ்சம் என ஆப்கானிஸ்தான் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த கிளிக்.அஃப் (Click.af) மற்றும் பக்கல் (Baqal) ஆகிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், நிதி நெருக்கடி காரணமாக அண்மையில் மூடப்பட்டன. மக்களின் வாங்கும் திறன் குறைந்துவிட்டதால், இனி சேவையைத் தொடர முடியாது என அந்நிறுவனங்கள் தெரிவித்தன.

இதன் எதிரொலியாக ஆப்கானிஸ்தானில் அனைத்து ஆன்லைன் வர்த்தக சேவைகளும் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு பெரிய நிறுவனங்கள் தங்கள் சேவைகளை நிறுத்தியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே புபர் (Bubar), ஹிண்டுகோஷ் (Hindukosh) ஆகிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் கடந்த ஆண்டு முடப்பட்டன.

இதையும் படிங்க: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு... உஜ்பெகிஸ்தான் செல்கிறார் மோடி

ABOUT THE AUTHOR

...view details