கிரின்ஸ்பர்க் : அமெரிக்காவில் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவன் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் கிரின்ஸ்பர்க் நகரில் உள்ள செயின்ட் ஹெலினா காலேஜ் அண்ட் கரியர் அகாடாமி என்ற உயர் நிலைப் பள்ளியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து உள்ளது.
துப்பாக்கியை மறைத்து வைத்து பள்ளிக்கு கொண்டு வந்த மாணவர் சக மாணவரை சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாணவன் துப்பாக்கியை பள்ளிக்கு மறைத்து வைத்து கொண்டு வர என்ன காரணம், யாரோ ஒரு மாணவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான காரணம் என்ன என்பது குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக உள்ளூர் போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் படுகாயம் அடைந்ததாகவும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர் கைது செய்யப்பட்ட நிலையில், என்ன காரணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு இடையே வழக்கம் போல் பள்ளி இயங்கும் என நிர்வாகம் அறிவித்து இருப்பது பெற்றோரிடையே அதிருப்தி மற்றும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.