வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா 2017 ஆம் ஆண்டு பதவியில் இருந்து வெளியேறிய பின்னர் தனது முதல் பொது நிகழ்ச்சிக்காக செவ்வாய்கிழமை (ஏப்.5) வெள்ளை மாளிகைக்கு திரும்பவுள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை, தற்போதைய அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோருடன் இணைந்து விழாவைக் கொண்டாடுவார் என்று தெரிவித்தார்.
அமெரிக்கர்கள் பயன்பெறும் வகையில் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் காப்பீடு திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ளது.