வடகொரியா: கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் உருவான கரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி உலுக்கி வந்த நிலையில் தற்பொழுது கரோனாவின் பரவல் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டு உள்ளனர்.
இருப்பினும் பல நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய கரோனா, ஒரு சில நாடுகளில் பாதிப்பு ஏற்படாமல் உள்ளது. இந்நிலையில் கரோனா பாதிப்பு ஏற்படாத நாடுகளில் ஒன்றான வடகொரியாவில் முதல் கரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
26 மில்லியன் மக்கள் வாழும் இந்நாட்டில், தலைநகர் பியாங்யாங்கில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் குறிப்பிடப்படாத எண்ணிக்கையில் ஞாயிற்றுக்கிழமை சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது, அதில் ஒருவர் ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் வடகொரியாவில் வாழும் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: அணு ஆயுதங்களை மேம்படுத்துகிறாரா கிம் ஜாங் உன்?