தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வடகொரிய எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர் கைது... நிலை என்ன? - சாரா

எல்லை தாண்டி அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்க ராணுவ வீரரை கைது செய்து உள்ளதாக வடகொரியா தெரிவித்து உள்ள நிலையில், அந்த சம்பவத்தை நேரில் பார்த்த நியூசிலாந்து பெண் வழக்கறிஞர் அது குறித்து விவரித்து உள்ளார்.

US
US

By

Published : Jul 19, 2023, 10:24 PM IST

வெலிங்டன் : அத்துமீறி வடகொரிய எல்லைக்குள் நுழைந்ததாக அமெரிக்க ராணுவ வீரர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், அந்த சம்பவத்தை நேரில் பார்த்த நியூசிலாந்தை சேர்ந்த பெண்மணி, கைது செய்யப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர் டிக்டாக் அல்லது வேறெதும் வீடியோவுக்காக இதை செய்கிறார் என நினைத்ததாக கூறி உள்ளார்.

தென் கொரியாவில் நிலைநிறுத்தப்பட்டு உள்ள அமெரிக்க ராணுவத்தின் இரண்டாம் கட்ட பிரைவேட் கிளாஸ் வீரர் டிராவிஸ் கிங். வடகொரிய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். அண்மையில் அமெரிக்கா, தென் கொரியா, மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கொரிய தீபகற்பத்தில் கண்டன் தாண்டி தாக்குதல் நடத்தும் பாலிஸ்டிக் வகை இரண்டு ஏவுகணைகளை வட கொரியா ஏவி சோதனை நடத்தியது.

அந்த சமயத்தில், தங்கள் நாட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற அமெரிக்க வீரரை கைது செய்து விசாரித்து வருவதாக வடகொரியா தெரிவித்தது. இந்நிலையில், அமெரிக்க வீரர், வடகொரிய எல்லைக்குள் நுழைந்ததை நேரில் கண்டதாகவும், அவர் ஏதோ வீடியோவுக்காகா இதை செய்கிறார் என நினைத்ததாக நியூசிலாந்தை பெண் வழக்கறிஞர் சாரா லெஸ்லீ தெரிவித்து உள்ளார்.

நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனை சேர்ந்தவர் சாரா லெஸ்லீ. வழக்கறிஞரான இவர் அண்மையில் தென் கொரியாவுக்கு சுற்றுலா சென்று உள்ளார். சுற்றுலாவின் இறுதி நாளில் தெற்கு மற்றும் வட கொரியாவின் எல்லைப் பகுதியில் பாதுகாக்கப்பட்ட ராணுவ மண்டலத்தை சுற்றிப் பார்த்து உள்ளார்.

இவரும் சுற்றுலா வந்த அனைவரும் அங்குள்ள கட்டிடங்களின் அருகில் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்த நிலையில், திடீரென இளைஞர் ஒருவர் வடகொரிய எல்லைக்குள் ஓடிச் செல்வதை பார்த்ததாக அவர் தெரிவித்து உள்ளார். முதலில் டிக்டாக் அல்லது சமூகவலைதளங்களில் பதிவிடுவதற்காகவோ, அல்லது பிராங்க் செய்வதற்காக இளைஞர் சென்றதாக நினைத்ததாக சாரா தெரிவித்து உள்ளார்.

எல்லைத் தாண்டிய இளைஞரை தென் கொரிய பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து பிடிப்பதற்குள் அவர் வடகொரிய எல்லைக்குள் நுழைந்ததாக சாரா தெரிவித்து உள்ளார். அதன் அவர் அமெரிக்கா ராணுவத்தை சேர்ந்த வீரர் என்பது தெரிய வந்ததாக அவர் கூறினார்.

வடகொரிய பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்ட அமெரிக்க வீரர் டிராவிஸ் கிங் என அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் கடந்த 2021ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் பணியில் சேர்ந்ததாகவும் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் உறுதி செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வடகொரியாவுடனா பிரச்சினையை அடுத்து தென்கொரியாவில் அமெரிக்க ராணுவம் நிலைநிறுத்தப்பட்டு உள்ள நிலையில், டிராவிஸ் கிங் அங்கு பணியமர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பணியில் ஏற்பட்ட குற்றச்சாட்டில் டிராவிஸ் கிங் சிக்கிக் கொண்ட நிலையில், அவர் மீது அமெரிக்க ராணுவம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருந்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்க ராணுவத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்கு பயந்து கூட டிராவிஸ் கிங் வடகொரிய எல்லைக்குள் வேண்டுமென்றே நுழைந்து இருக்கலாம் என அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :"இந்தியா" பெயர் விவகாரம்.. 26 எதிர்க்கட்சிகள் மீது புகார்! எதுக்கு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details