தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கவுன்சிலின் முடிவிற்கு முன் எந்த தடை செய்யப்பட்ட ட்விட்டர் கணக்களும் மீட்கப்படாது - எலான் மஸ்க் - மஸ்க்

தடை செய்யப்பட்ட எந்த ட்விட்டர் கணக்களும் ட்விட்டரின் கவுன்சில் முடிவிற்கு முன் மீட்கப்பட மாட்டாது என ட்விட்டரின் புதிய தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

கவுன்சிலின் முடிவிற்கு முன் எந்த தடை செய்யப்பட்ட ட்விட்டர் முகப்புகளும் மீட்கப்படாது - எலான் மஸ்க்
கவுன்சிலின் முடிவிற்கு முன் எந்த தடை செய்யப்பட்ட ட்விட்டர் முகப்புகளும் மீட்கப்படாது - எலான் மஸ்க்

By

Published : Oct 29, 2022, 12:39 PM IST

சான் ஃப்ரான்சிஸ்கோ: ” தடை செய்யப்பட்ட எந்த ட்விட்டர் கணக்களும் ‘கண்டெண்ட் மாடரேஷன் கவுன்சில்’ (Content Moderation Council) முடிவு செய்யும் முன்பு மீட்கப்பட மாட்டாது என ட்விட்டரின் புதிய தலைவரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, “ட்விட்டர் ‘கண்டெண்ட் மாடரேஷன் கவுன்சில்’ எனும் கவுன்சில் ஒன்றை உருவாக்கி, அதில் பல்வேறு பார்வைகளைக் கொண்ட கருத்துகளும் முன்வைக்கப்படும். அதற்கு முன்பு எந்த ட்விட்டர் கணக்களும் மீட்கப்பட மாட்டாது, பதிவுகள் குறித்த எந்த முடிவும் எடுக்கப்பட மாட்டாது” என தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதற்கு பின் அவர் பதிவிட்ட ட்வீட்டில், ட்விட்டர் பதிவுகள் குறித்த திட்ட வரையறைகளில் எந்த மாற்றமும் இல்லை என விளக்கமளித்தார்.

மேலும், ட்விட்டர் தலைவராக பொறுப்பேற்றதும், “இனி நல்ல காலம் ஆரம்பிக்கட்டும்” என பதிவிட்டர். மேலும், “நான் ட்விட்டரைக் கைப்பற்றியதன் காரணம் வருங்காலத் தலைமுறையினருக்கு பல்வேறு நம்பிக்கைகளைச் சார்ந்த விவாதங்களை வன்முறையற்று ஆரோக்கியமாக ஒரு பொதுவான டிஜிட்டல் தளத்தை வழிவகுப்பது அவசியம். தற்போது சமூக ஊடகம் மொத்தமாக இடது சாரியத்தை சார்ந்தோ அல்லது மொத்தமாக வலது சாரியத்தை சார்ந்தோ சென்று விடும் அபாயம் உள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அன்பான வார்த்தைகளுக்கு நன்றி - மோடிக்கு ரிஷி சுனக் பதில்

ABOUT THE AUTHOR

...view details