தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

விரைவில் நித்தியானந்தா ரீஎன்ட்ரீ..! சமாதி முடியப்போகுதாம்-கைலாசா அப்டேட் - MyDaughterJoinedACult

சமாதியில் இருப்பதாக கூறி சீடர்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கும் நித்தியானந்தா விரைவில் தனது சமாதி நிலை முடியப்போகிறது என்று புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

விரைவில் நித்தியானந்தா ரீ என்ட்ரீ
விரைவில் நித்தியானந்தா ரீ என்ட்ரீ

By

Published : Jun 7, 2022, 6:36 PM IST

Updated : Jun 7, 2022, 7:08 PM IST

ஐதராபாத்: தனிநாட்டில் இருப்பதாக கூறிக்கொள்ளும் நித்தியானந்தா சமூக வலைத்தள பக்கங்களில் மட்டும் அவ்வப்போது தோன்றி சீடர்களுக்கு அருளுரை கூறி வந்தார். கடந்த சில மாதங்களாக கலாசாவிலேயே ஒரு தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் நித்தியானந்தா.

தான் சமாதியில் இருப்பதாக கூறி சீடர்களை நம்ப வைத்து வருகிறார். பேச முடியவில்லை, எழுதமுடியவில்லை ஆனால் முகநூல் பதிவு மட்டும் செல்போனில் நானே டைப் செய்து பதிவிடுகிறேன் என கூறி வந்தார்.

இதையும் படிங்க: அனுதாபம் தேடுகிறாரா நித்தியானந்தா? கைலாசாவில் நடப்பது என்ன?

நித்தியானந்தா உயிருடன் தான் இருக்கிறார் என நம்ப வைக்கும் விதமாக ஒருசில புகைப்படங்களும் பதிவேற்றப்பட்டன. அவரது சிஷ்யைகளும் விதம் விதமாக பேசி வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். நித்தியானந்தாவுக்கு உடல்நலக்குறைவு என்ற அனுதாப அலையால் கைலாசாவின் கஜானாவில் சீடர்கள் பணத்தை அள்ளி கொட்டி வந்தனர். நித்யானந்தாவே போதும், போதும் என்று கூறுமளவுக்கு கைலாசாவின் கஜானா நிரம்பி வழிந்தது.

டல்லாக காட்சியளிக்கும் நித்தி

இந்நிலையில் தற்போது நித்தியானந்தாவின் உடல் நலை குறித்து புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், தற்போதும் ஆழ்ந்த சமாதி நிலையை அனுபவிக்கிறேன். கூடிய விரைவில் என்னுடைய உடலுடன் இணைவேன், வழக்கமான சத்சங்கம் மற்றும் தரிசனங்கள் மீண்டும் துவங்கப்படும் என நித்தியானந்தா கூறியுள்ளார்.

விரைவில் நித்தியானந்தா ரீ என்ட்ரீ?
Last Updated : Jun 7, 2022, 7:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details