ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியாகிவரும் ஆய்வு இதழில் வெளியான கட்டுரையில், ஆறு கண்டங்களில் உள்ள 27க்கும் மேற்பட்ட நாடுகளில் உருவாக்கப்பட்டுவரும் தொடர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் நிதியளித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமண்டா லோட்ஸ், "நெட்ஃபிளிக்ஸ் எந்த அளவிற்கு உலகளாவிய தொலைக்காட்சி சேவையில் உருமாறியுள்ளது என்பதை சிலர் அடையாளம் கண்டுள்ளனர்.
நெட்ஃபிளிக்ஸ் இப்போது சிங்கப்பூர், ஆம்ஸ்டர்டாம் மற்றும் சாவ் பாலோ போன்ற நாடுகளில் பிராந்திய அலுவலகங்களை திறந்துள்ளது.
கடந்த ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலிய தலைமையகத்தைத் திறந்த அந்நிறுவனம் தற்போது உலகளாவிய இணைய காட்சி ஊடகமாக மாறியுள்ளதை யாரும் மறுக்க முடியாது.
உலகளாவிய தொலைக்காட்சி சந்தைகளில் வீடியோ-ஆன்-டிமாண்ட் தளங்களின் மிக முக்கிய முகமாக நெட்ஃபிளிக்ஸ் உருப்பெற்றுள்ளது.