காட்மாண்டூ:நேபாளத்தின் தாரா ஏர் என்ற சிறிய ரக பயணிகள் விமானம் பொக்காரா நகரில் இருந்து புறப்பட்டு 22 நிமிடங்களுக்கு பிறகு கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து நடுவானில் மாயமானது. இந்த 2 ஹெலிகாப்டர்களை கொண்டு விமானத்தை தேடும் பணியில் நேபாள ராணுவத்தினர் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து, விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், கோவாங் என்ற இடத்தில் அது விழுந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், முஸ்தாங் மாவட்டத்தின் சனோஸ்வேர் என்ற பகுதியில் விமானம் விழுந்து கிடப்பதை நேபாள ராணுவம் இன்று காலை கண்டறிந்துள்ளது. மேலும், விபத்துக்குள்ளான விமானத்தின் சிதறிய உதிரி பாகங்களின் புகைப்படத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.