லாஸ் ஏஞ்சல்ஸ்: 80ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பீவர்லி ஹில்டனில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நகைச்சுவை நடிகர் ஜெராட் கார்மிச்சல் தொகுத்து வழங்கினார். இதில் இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம் பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடல் பிரிவிலும் மற்றும் சிறந்த ஆங்கிலம் அல்லாத திரைப்படங்கள் பிரிவில் ஆர்ஆர்ஆர் படமும் பரிந்துரை செய்யப்பட்டது.
Golden Globes 2023: கோல்டன் குளோப் விருதை வென்ற ‘Naatu Naatu’ பாடல் - 80th Golden Globe Awards
ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.
இந்த நிலையில், சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை ‘நாட்டு நாட்டு’ பாடல் வென்றுள்ளது. இதற்கான விருதை அதன் இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக்கொண்டார். ஆர்ஆர்ஆர் திரைப்படம், கடந்த 2022 மார்ச் 25ஆம் தேதி பான் இந்தியா அளவில் வெளியாகி வெற்றி பெற்றது. இதில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அலியா பட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் இப்படம் ஆஸ்கார் விருதுகளின் பரிந்துரையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அஜித் கட்அவுட்டிற்கு முதுகில் அலகு குத்தி மாலை அணிவித்த ரசிகர்