தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வாகனங்களில் விரைவில் இணைய வசதி..! எலான் மஸ்க்கின் புதிய திட்டம்..!

எலான் மஸ்க்கின் சொந்த நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங் இணையச் சேவையை RV(Recreational Vehicles) வாகனங்களில் கிடைக்கப்பெறும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Etv BharatRV  வாகனங்களில் விரைவில் இணைய வசதி - எலன் மஸ்க்கின் புதிய திட்டம்
Etv BharatRV வாகனங்களில் விரைவில் இணைய வசதி - எலன் மஸ்க்கின் புதிய திட்டம்

By

Published : Oct 26, 2022, 3:29 PM IST

சான் பிரான்சிஸ்கோ:எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் அதன் செயற்கைக்கோள் இணையச் சேவையான ஸ்டார்லிங்க் சேவையை RV வாகனங்களுக்கு (ஆர்வி) இந்த ஆண்டு டிசம்பர் முதல் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. RV வாகனங்களுக்கான ஸ்டார்லிங்க் சேவை வழங்கும் போது எந்த இடத்திலிருந்தும் இயங்கும் அளவில் சேவை கிடைக்குமாறு வழங்கப்பட உள்ளது.

ஸ்டார்லிங்க்கின் நிலையான உயர் செயல்திறன் இணையச் சேவையானது, அதன் பரந்த மற்றும் மேம்படுத்தப்பட்ட ஜிபிஎஸ் திறன்களின் காரணமாக அதிக செயற்கைக்கோள்களுடன் இணைக்க முடியும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சேவையானது வாகனங்கள் செல்லும் இடங்களில் நம்பகமான இணைப்பை வழங்க உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இணையச் சேவையானது கார் செல்லும் போதும், நிலையான இடத்தில் நிற்கும் போதும் என அனைத்து இடங்களிலும் நிலையான ஜிபிஎஸ் சமிக்ஞைகளை வழங்குகிறது.

இந்த சேவையை நிறுத்தி மீண்டும் தொடர்ந்து பெறுமாறு எளிமையாக வழங்க உள்ளது. இந்த சேவைக்கான கட்டண அம்சங்களானது மாதாந்திர கட்டணமாகவோ அல்லது பயனர்கள் தங்கள் சொந்த பயணத் தேவைகளுக்கு ஏற்பவும் தனி சேவையாகவோ பெற்றுக் கொள்ளலாம். இந்த இணையச் சேவை தற்போது அனைத்து சந்தைகளிலும் மார்க்கெட் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் முதல் இந்த ஆர்டர்களுக்கான டெலிவரிகள் தொடங்கும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவையானது அதன் ஏரோ டெர்மினல் பொருத்தப்பட்ட ஒவ்வொரு விமானத்திற்கும் 350mbps வரையிலான இணைய வேகத்தை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:விரைவில் ‘சந்திரயான் - 3’ விண்ணில் ஏவப்படும்..!

ABOUT THE AUTHOR

...view details