சமீபத்தில் ட்விட்டர் தலைவரான எலான் மஸ்க், 200க்கும் மேற்பட்ட ட்விட்டர் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார்.
இன்று(நவ.4) காலை சில ஊழியர்கள் தங்களது லேப்டாப்பில் பணிபுரிய உள்செல்ல(Log -in) முனைந்தபோது (ட்விட்டரில் இன்றும் வீட்டில் இருந்தபடி வேலைபார்க்கும்(WFH) பணி தொடர்கிறது), அவர்களது முகப்பு நிராகரிக்கப்பட்டதும், அவர்களை பணிநீக்கம் செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
ட்விட்டரில் பணிபுரியும் ஊழியர்கள், கடந்த வாரம் ட்விட்டரின் தலைவராக எலான் மஸ்க் பதவியேற்றதும் பின் தங்களுக்கும் தங்களது மூத்த அலுவலர்களுக்கும் இடையேயான தகவல் பகிர்தலில் சிக்கல் ஏற்பட்டு வந்ததாக, சில ஊழியர்கள் புகார் தெரிவித்ததையடுத்து இந்த நடவடிக்கை நடத்தப்பட்டுள்ளது.