வாஷிங்டன்: டெஸ்லாவின் முதன்மைச் செயல் அதிகாரியும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் ட்விட்டரில் சர்ச்சையான கருத்துகளை பதிவிடுவதை வழக்கமாக வைத்துவருகிறார். இதனால், ட்விட்டர் நிறுவனம் இவரது பல ட்வீட்டுகளை நீக்கியிருக்கிறது.
இதற்கு மஸ்க், ட்விட்டரில் சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்க முடியவில்லை என்றும், தனது கைவசம் ட்விட்டர் வந்தால் முழு கருத்துசுதந்திரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படியே ஏப்ரல் 26ஆம் தேதி 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்கினார்.
இந்தத் தொகை இந்திய மதிப்பில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 63 கோடியே 74 லட்சம் ரூபாயாகும். இந்த நிலையில், மஸ்க் மீண்டும் சர்ச்சையான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நான் மர்மமான முறையில் உயிரிழந்தால், அதற்கான காரணங்களை தெரிந்து கொண்டால் மகிழ்ச்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ட்வீட் அவரது பாலோயர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.