பாஸ்டன்:உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த வாரம் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார். ட்விட்டர் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றது முதலே, பல அதிரடியான நடவடிக்கைகளை மஸ்க் மேற்கொண்டு வருகிறார்.
ட்விட்டரின் சிஇஓவாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகளை நீக்கினார். அதுமட்டுமல்லாமல் அந்நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்தும் ஏராளமான ஊழியர்களை நீக்கி ஆள்குறைப்பு செய்தார். அதேபோல், ட்விட்டரின் ப்ளூ டிக்கைப் பெறுவதற்கு மாதம் 8 டாலர் வசூலிக்கப்படும் என்று அறிவித்தார்.
இது பல்வேறு தரப்பினரிடமும் விமர்சனத்திற்குள்ளானது. இதனிடையே ஆள்குறைப்பு குறித்த விமர்சனத்திற்கு பதிலளித்த மஸ்க், ஒரு நாளைக்கு 4 மில்லியன் டாலர்கள் இழப்பை சந்திக்கும் நிறுவனத்திற்கு, ஆள்குறைப்பு செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார்.
ட்விட்டரில் கடந்த சில நாட்களாக மஸ்க்தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். இதைப் பயன்படுத்தி பலர் மஸ்க் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி லைக்குகளை வாங்கி வருகிறார்கள். எலான் மஸ்க்கின் புரொபைல் ஃபோட்டோ, அவரது பெயர் என அப்படியே மஸ்க்கின் கணக்கை ஜெராக்ஸ் எடுத்ததுபோல ட்விட்டர் கணக்கு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.