நைஜீரியா(அபுஜா): கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வரும் வெள்ளத்தால் 2.5 கோடி பேர் பல்வேறு விதங்களில் பாதிப்படைந்துள்ளனர். அந்நாட்டிலுள்ள 36 மாநிலங்களில் 34 மாநிலங்களைப் பாதித்துள்ள இந்த வெள்ளத்தால் 1.3 கோடி பேர் புலம்பெயர்ந்துள்ளனர். 600 பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
டையரியா போன்ற நீரினால் வரும் நோய்கள், நுரையீரல் பிரச்சனைகள், தோல் நோய்கள் போன்ற பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக யூனிசெப் தெரிவித்துள்ளது. வட - கிழக்கு போர்னோ பகுதிகளிலுள்ள அடமவ மற்றும் யோப் ஆகிய இடங்களில் மட்டும் 7,485 பேர் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 319 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சில வாரங்களுக்கு மழை நீடிக்குமெனக் கருதப்படுவதால் மக்களும் உதவியை நாடி காத்திருக்கின்றனர்.