தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! - ஹெராட் நிலநடுக்கம்

Afghanistan - Herat earthquake: ஆப்கானிஸ்தானின் ஹெராட் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 320க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ANI

Published : Oct 8, 2023, 8:07 AM IST

ஹெராட் (ஆப்கானிஸ்தான்): மேற்கத்திய ஆப்கானிஸ்தானின் ஹெராட் பகுதியில் 6.3 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால், இதுவரை 320க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருப்பதாகவும் ஒருங்கிணைந்த நாடுகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஹெராட் பகுதி அதிகாரிகளின் கூற்றுபடி, 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 600க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், ஜிண்டா ஜான் மற்றும் கோர்யான் மாவட்டங்களில் உள்ள 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்து விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், இது குறித்து பேரிடர் மேலாண்மை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜனான் சாயிக் கூறுகையில், ஹெராட் பகுதியில் உள்ள ஜிண்டா ஜான் மாவட்டத்தின் 3 கிராமங்களைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஃபராஹ் மற்றும் பட்கிஸ் மாகாணத்தின் சில பகுதிகள் சேதம் அடைந்து இருப்பதாக வீடியோ ஒன்றில் அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். இதனிடையே, ஒருங்கிணைந்த நாடுகளின் புவியியல் ஆய்வு அளித்த அறிக்கையின்படி, மேற்கத்திய ஆப்கானிஸ்தானில் ஆறு நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஒன்று. அதிலும், கடைசியாக ஜிண்டா ஜான் மாவட்டத்தில் 5.9 என்ற ரிக்டர் அளவில் 7.7 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் அருகில் உள்ள ஃபராஹ் மற்றும் பட்கிஸ் போன்ற மாகாணங்களிலும் உணரப்பட்டு உள்ளது.

முன்னதாக, கடந்த 2022 ஜூன் மாதம், கிழக்கத்திய ஆப்கானிஸ்தானின் மலைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 1,500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு! பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே தீவிரமாகும் போர்!

ABOUT THE AUTHOR

...view details