இங்கிலாந்து: லண்டனில் நடந்த தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளிகள் மாநாட்டில் கலந்து கொண்ட தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், லண்டன் கேம்பர்லி நகரில் முல்லைப் பெரியாறு அணையினை கட்டிய கர்னல் ஜான் பென்னி குயிக் கல்லறை அமைந்துள்ள தேவாலய நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று, எல்காட் நிர்வாக இயக்குநர் தி.அஜய் யாதவ், லண்டன் திமுக அயலக அணி அமைப்பாளர் பைசல், சந்தன பீர் ஒலி ஆகியோருடன் தேவாலயம் சென்று கர்னல் ஜான் பென்னி குயிக் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
'தேனி மக்களின் கடவுள்' கர்னல் ஜான் பென்னிகுயிக் கல்லறைக்கு அமைச்சர் மரியாதை! - mullai periyar dam
அமைச்சர் மனோ தங்கராஜ் லண்டன் கேம்பர்லி நகரில் உள்ள முல்லைப்பெரியாறு அணையினை கட்டிய கர்னல் ஜான் பென்னி குயிக் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் லண்டன் ரெக்ரியேஷன் பார்க்கில் தமிழ்நாடு அரசு சார்பாக கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலை நிறுவப்பட உள்ள இடத்திற்கு சென்று பார்வையிட்டார். ஜான் பென்னிகுயிக் சிலை வைப்பது தொடர்பாகவும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்த்துகளை அவர்களிடம் பகிர்ந்து கொண்டார். இதில் அவருடன் லண்டன் திமுக அயலக அணி நிர்வாகிகள் சத்யா,செந்தில் குமார், பிரேம் ஆகியோர் இருந்தனர்.
இதையும் படிங்க:தாவுத் இப்ராகிம் கூட்டாளிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை
TAGGED:
mullai periyar dam