சான்பிரான்சிஸ்கோ(அமெரிக்கா): கடந்த சில நாட்களாக அமேசான், மெட்டா போன்ற நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடைபெற்ற நிலையில் மெட்டாவின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான (CEO) மார்க் ஸுக்கர்பெர்க் அடுத்த ஆண்டு ராஜினாமா செய்வதாக வெளியான செய்திகளை மெட்டா மறுத்துள்ளது.
மார்க் ஸுக்கர்பெர்க், தன்னைப் பதவி விலக முடிவு செய்துள்ளதாகவும், இது அவரது பல பில்லியன் டாலர் திட்டமான மெட்டாவெர்ஸை பாதிக்காது என்றும் சில கருத்துகள் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.
இந்நிலையில் மெட்டாவின் தகவல் தொடர்பு இயக்குநர் ஆண்டி ஸ்டோன் இதனை மறுத்து, "இது தவறானது. முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களால் பல கேள்விகள் எழுப்பப்பட்ட போதிலும், ஸுக்கர்பெர்க் தனது மெட்டாவெர்ஸ் கனவை நனவாக்குவதில் உறுதியாக உள்ளார்” என்று ட்வீட் செய்துள்ளார்.