ஹவாய்:அமெரிக்காவின் ஒரு பகுதியான ஹவாய் தீவுகள் பசிபிக் கடலின் நடுவில் அமைந்துள்ளது. அமெரிக்காவின் தீவு மாநிலமான ஹவாயில் காலநிலை மாற்றம், காற்றில் ஈரப்பதம் இன்மை போன்ற காரணங்களால் காட்டுத்தீ ஏற்பட்டது. மக்கள் தங்களை இந்த தீயிலிருந்து காப்பாற்றிக்கொள்ள கடலில் குதித்தும், தீயில் கருகியும் பலர் உயிரிழந்து உள்ளனர். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் அவர்களின் உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் காட்டுத்தீயினால் அப்பகுதிகளில் உள்ள மொபைல் போன் டவர் செயல்படாதலாலும் மற்றும் தீவின் மேற்கு பகுதிகளில் பல வாரங்களாக மின்வசதி துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர் என மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ள வீரர்கள் தெரிவித்து உள்ளனர்.
காட்டுத் தீயால் 55 நபர்கள் உயிரிழந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் பலி எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவில் ஏற்பட்ட இந்த காட்டுத்தீ, கடந்த ஒரு நூற்றாண்டில் நடந்த மிக மோசமான அமெரிக்க காட்டுத்தீயாகும் எனவும், கடந்த 2018ம் ஆண்டு வடக்கு கலிபோர்னியாவில் கேம்ப் ஃபயரில் (Camp Fire) ஏற்பட்ட விபத்தில் சுமார் 85 நபர்கள் உயிரிழந்தாக இருந்த நிலையில் இந்த சம்பவத்தில் 89 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:150 வருடம் பழமையான ஆலமரத்துடன் 53 உயிர்களையும் காவு வாங்கிய ஹவாய் காட்டுத்தீ!