தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

செவ்வாய் கிரகத்தில் விண்கற்கலால் ஏற்பட்ட இரண்டு பள்ளங்கள்... புதிய தகவல்களை அனுப்பிய நாசாவின் இன்சைட் லேண்டர்!

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் விண்கல் தாக்கத்தால் ஏற்பட்ட இரண்டு பள்ளங்கள் குறித்த தகவல்களை இன்சைட் லேண்டர் அனுப்பியுள்ளது. இதன்மூலம் பல்வேறு புதிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

mars-
mars-

By

Published : Nov 1, 2022, 9:45 PM IST

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள இன்சைட் லேண்டர் என்ற தானியங்கி விண்கலத்தை நாசா கடந்த 2018ஆம் ஆண்டு அனுப்பியது. இந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து வருகிறது. செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களை இந்த விண்கலம் கண்டறிந்துள்ளது.

இந்த நிலையில், புதிதாக இரண்டு விண்கல் தாக்கத்தால் ஏற்பட்ட பள்ளங்கள் குறித்த தகவல்களை இன்சைட் லேண்டர் அனுப்பியுள்ளது. அதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி, இன்சைட் லேண்டரிலிருந்து சுமார் 3,500 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு விண்கல், செவ்வாய் கிரகத்தைத்தாக்கி, 100 மீட்டருக்கும் மேல் விட்டம் கொண்ட பள்ளத்தை உருவாக்கியுள்ளது.

அதேபோல் இன்சைட்டிலிருந்து சுமார் 7,500 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு விண்கல் தாக்கியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவ்வளவு பெரிய பள்ளம் சில தசாப்தங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஒரு தலைமுறைக்கு ஒரு முறையோ ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதனால் இந்தப் பள்ளம் விஞ்ஞானிகளிடம் புதிய உற்சாகத்தை கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்சைட் மூலம் பெறப்பட்ட நில அதிர்வுத்தரவு தொலைதூரத்தாக்கங்களில் இருந்து வந்ததாகவும், சுற்றுப்பாதையின் புகைப்படங்கள், பள்ளங்கள் எப்போது உருவாக்கப்பட்டன என்பதை நிறுவ உதவியதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

முதன்முறையாக, பூமியில் நிகழாத தாக்கங்களைப் பதிவு செய்ய நில அதிர்வு மற்றும் புகைப்பட நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கிரகத்தின் மேற்பரப்பில் விண்கல் தாக்குதல்கள் நடைபெறுவதால், உட்பகுதியில் உள்ள நில அதிர்வுமானியில் மேற்பரப்பு அலைகள் பதிவாகாமல் இருந்திருக்கக்கூடும் என்றும் தெரிவித்தனர்.

இந்த நில அதிர்வு தரவுகள் மூலம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிற்கு அடியில் 5 முதல் 30 கிலோ மீட்டர் வரை உள்ள அமைப்பை விஞ்ஞானிகளால் அடையாளம் காண முடிந்தது. இன்சைட் பதிவு செய்த பெரும்பாலான அதிர்வுகள், செவ்வாய் கிரகத்தின் ஆழமான பாறை அசைவுகளுடன் தொடர்புடைய பாரம்பரிய முதன்மையான மற்றும் இரண்டாம் நிலை அலைகளை உற்பத்தி செய்தன.

இப்போது புதிதாக கண்டறியப்பட்ட இந்த சிற்றலைகள் செவ்வாய் கிரகத்தின் மேல்பகுதியில் மேலோட்டமாக பயணித்துக்கொண்டிருந்தன என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இன்சைட் லேண்டரின்கீழ் எடுக்கப்பட்ட முந்தைய புள்ளி அளவீட்டின் அடிப்படையில் அவர்கள் கணித்ததைவிட, மேற்பரப்பு அலைகளின் சராசரி வேகம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

விஞ்ஞானி டாக்டர் பிரிஜிட் நாப்மேயர்-எண்ட்ரூன் கூறுகையில், "புதிய கண்டுபிடிப்புகள் மிகவும் சுவாரஸ்யமானவை. ஏனெனில், அவை ஒரு கிரகத்தின் மேற்பரப்பு பற்றிய முக்கிய தடயங்களை வழங்குகிறது. இதன்மூலம் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய செவ்வாய் கிரகத்தின் நிலைமைகள், அப்போது ஏற்பட்ட விண்கல் தாக்கங்கள் குறித்து அறியலாம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: நிலத்திற்கு அடியில் இயற்பியல் ஆய்வகம் - தென் கொரியா புதிய முயற்சி

ABOUT THE AUTHOR

...view details