தமிழ்நாடு

tamil nadu

இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே ராஜினாமா!

By

Published : Apr 3, 2022, 7:37 PM IST

இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜினாமா கடிதத்தை கோத்தபய ராஜபக்சேவிடம் வழங்கியுள்ளார்.

Mahinda Rajapaksa
Mahinda Rajapaksa

கொழும்பு : இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் மக்கள் தவித்துவருகின்றனர். இந்நிலையில் மூன்று நாள்கள் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.3) நள்ளிரவு முதல் சமூக வலைதளங்கள் மீதான தடை அமலுக்குவருகிறது. நாடு முழுக்க 36 மணி நேரம் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

மேலும் சமூக வலைதளங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆகையால் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், யூடியூப், ஸ்நாப்சாட், டிக்டாக் மற்றும் இன்ட்ஸ்டாகிராம் ஆகியவை முடங்கிபோய் உள்ளது.

22 மில்லியன் (2 கோடியே 20 லட்சம்) மக்கள் தொகை கொண்ட தீவு நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நாடு அன்னிய செலாவணிக்காக கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நாடு முழுக்க 13 மணி நேரம் மின்வெட்டு காணப்படுகிறது. இதற்கிடையில் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்ட பரவலை தடுக்க நாடு முழுக்க ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் ராஜபக்சே குடும்பத்தினர் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர் கோரிக்கைகள் விடுத்து வருகின்றன. இந்நிலையில் இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜினாமா கடிதத்தை கோத்தபய ராஜபக்சேவிடம் வழங்கியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details