டொராண்டோ:கனடாவில் உள்ள ரிச்மண்ட் மலைப்பகுதியின் அருகில் அமைந்திருந்த விஷ்ணு கோயிலில் இருந்த காந்தி சிலை நேற்று (ஜூலை 13) சேதப்படுத்தப்பட்டது. இச்சம்பவம் கனடா வாழ் இந்தியர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது.
மேலும் அங்கு வாழும் இந்தியர்கள் இச்செயலை செய்தவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தினர். இருப்பினும் சிலையை சேதப்படுத்தியவர்கள் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், இன்று அதன் ட்விட்டரில் இந்த விவகாரம் குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. அந்த ட்விட்டர் பக்கத்தில், "ரிச்மண்ட் ஹில்லில் உள்ள விஷ்ணு கோயிலில் இருந்த மகாத்மா காந்தி சிலை அவமதிக்கப்பட்டதையறிந்து நாங்கள் வேதனையடைந்துள்ளோம். இந்த வெறுக்கத்தக்க காழ்ப்புணர்ச்சியான குற்றச்செயல் கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் உணர்வுகளை ஆழமாக காயப்படுத்தியுள்ளது. இந்த குற்றத்தை விசாரிக்க நாங்கள் கனடா அலுவலர்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம்'' எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் உணர்வுகளை இந்தச்செயல் மிகவும் வருத்தப்படுத்தியுள்ளது. இந்தியத் தூதரகம் குற்றத்தின் மீதான மேற்கண்ட விசாரணையை கோருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிங்க:இலங்கையில் அவசரநிலை பிரகடனம்- தப்பி ஓடிய அதிபர் கோத்தபய ராஜபக்ச