அமெரிக்கா:உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள எலான் மஸ்க் (Elon Musk) 'Space x' மற்றும் 'Tesla' ஆகிய இரண்டு நிறுவனத்திற்கும் முதன்மை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். தொழிலதிபரான இவர் கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார்.
அதன் பிறகு, ட்விட்டர் மற்றும் அதன் நிர்வாகத்தில் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த எலான் மஸ்க், "ட்விட்டர் 2.0" உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன் ஒருபகுதியாகவும், Space x மற்றும் Tesla நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாலும் ட்விட்டர் நிர்வாகத்திற்கு லிண்டா யாக்காரினோ என்பவரை புதிய சிஇஒ-வாக நியமித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதையும் படிங்க:காதலியுடனான உறவை மறுக்கும் காட்பாதர் நடிகர்... இது என்ன புது பிரச்சினை!
பென்சில்வேனியா பல்கலைக்கழக முன்னாள் மாணவரான லிண்டா யாக்காரினோ, தாராளவாதம் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பட்டம் பெற்றுள்ளார். இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக NBC Universal நிறுவனத்தில் விளம்பர செயல்திறனை அளவிடுவதற்கான ஒரு தொழில்துறை சட்ட நிபுணராக பணியாற்றி வந்துள்ளார்.
மேலும், அந்நிறுவனத்தின் விளம்பர விற்பனையின் தலைவராக இருந்த அவர், டர்னர் என்டர்டெயின்மென்ட்டில் 19 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இப்படி பல்வேறு திறன்களில் ஆற்றல் மிக்க லிண்டா யாக்காரினோதான் தற்போது ட்விட்டரின் முதன்மை செயல் அதிகாரி. இன்று பொறுப்பேற்றுள்ள லிண்டா யாக்காரினோ இது குறித்து செய்தி நிறுவங்களுக்கு பேட்டியளித்துள்ளார். அது மட்டுமின்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் இது தொடர்பான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க:Suez Canal : சுயஸ் கால்வாயில் பழுதான சரக்கு கப்பல்.. கப்பல் போக்குவரத்து பாதிப்பு!
அதில் வாருங்கள் அனைவரும் ஒன்றினைந்து "ட்விட்டர் 2.o" வை உருவாக்குவோம் என பயனாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், ட்விட்டரில் தன்னுடன் இணைந்து பணியாற்ற NBC Universal நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவரான ஜோ பெனாரோச் என்பவரையும் லிண்டா யாக்காரினோ பணியில் அமர்த்தியுள்ளார். இந்த தகவலையும் அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
மேலும் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள The Wall Street Journal பத்திரிக்கை, ஜோ பெனாரோச் , லிண்டா யாக்காரினோவின் நம்பிக்கைக்குறிய ஆலோசகராக இருந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளது. மேலும் "ட்விட்டரின் தொழில்நுட்பம், வணிகம் உள்ளிட்ட அனைத்திலும் முன்னேற்றத்தை கொண்டுவர மஸ்க் மற்றும் மில்லியன் கணக்கானவர்களுடன் இணைந்து பணியாற்ற நான் காத்திருக்கிறேன்" எனவும் லிண்டா யாக்காரினோ தனது ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:Odisha Train Accident : போப் பிரான்சிஸ், புதின், இம்மானுவேல் மேக்ரான் இரங்கல்!