தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தீபாவளிக்கு அரசு விடுமுறையா?... இந்தியாவில் இல்லை! அமெரிக்காவில்! - federal holiday

தீபாவளி தினத்தன்று தேசிய விடுமுறை அளிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கலாகியுள்ள நிலையில், இது அந்த நாட்டின் பன்முகத்தன்மையை கொண்டாடும் செயலாக அமையும் என கருதப்படுகிறது.

Legislation introduced to make Diwali a federal holiday in US
தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா தாக்கல்

By

Published : May 27, 2023, 4:59 PM IST

Updated : May 27, 2023, 5:45 PM IST

வாஷிங்டன்: தீபாவளிப் பண்டிகையை, பொது விடுமுறையாக அறிவிக்கும் மசோதா அமெரிக்க காங்கிரசில் பிரபல உறுப்பினர் கிரேஸ்ட் மெங்கால் தாக்கல் செய்யப்பட்டது. இது பல்வேறு தரப்பினரும் வரவேற்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

மசோதா தாக்கலுக்குப் பிறகாக காணொலி மூலம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கிரேஸ்ட் மெங், "உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களுக்கும், குயின்ஸ், நியூயார்க் மற்றும் அமெரிக்காவில் உள்ள எண்ணற்ற மக்களுக்கும் தீபாவளிப்பண்டிகை மிக முக்கியமான நாட்களில் ஒன்றாகும்" என கூறினார்.

அமெரிக்காவில் 12வது பொது விடுமுறையாக தீபாவளியை அங்கீகரித்து, சட்டமாக்குவதன் மூலம், குடும்பங்களுடனும் நண்பர்களுடனும் ஒன்றாக இந்த பண்டிகையை கொண்டாட வழிபிறக்கும். மேலும் பன்முக கலாசார அமைப்புகளை அமைப்பை அமெரிக்க அரசு மதிக்கிறது என்பதற்கு இதுவே சான்று எனவும் அவர் கூறினார்.

இந்தியர்கள் அதிகம் வாழும் குயின்ஸ் மாகாணத்தில், தீபாவளி கொண்டாட்டங்கள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. தீபாவளி தின விடுமுறை சட்ட மசோதா, இதன் முக்கியத்துவத்தைப் பற்றி அமெரிக்கர்கள் அறிந்து கொள்வதற்கும், நாட்டின் பன்முகத்தன்மையை கொண்டாடுவதற்கும் ஒரு படியாக அமைந்துள்ளது.

நியூயார்க் சட்டமன்ற உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமார் கூறியதாவது, "அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் மெங், தற்போது, தீபாவளியை பொது விடுமுறையாக மாற்றுவதற்கான, தனது வரலாற்றுச் சட்டத்தின் மூலம் அதை சாத்தியமாக்கி உள்ளார். இனி, இப்பண்டிகையை, 4 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள், உற்சாகமாக கொண்டாடுவார்கள் என்று தெரிவித்து உள்ளார்.

நியூயார்க் மாநில செனட்டர் ஜெர்மி கூனி, தீபாவளி பண்டிகைக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பது, அப்பண்டிகை குறித்த கலாச்சார பாரம்பரியத்தை அனுபவிக்காத அல்லது கடைபிடிக்காத அமெரிக்கர்களையும், இதில் இணைப்பதற்கான நடவடிக்கை என்று குறிப்பிட்டு உள்ளார்.

நியூயார்க் நிர்வாகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள முதல் இந்திய அமெரிக்கரான சேகர் கிருஷ்ணன் கூறியதாவது, தெற்காசிய மக்கள் மட்டுமல்லாது, இந்தோ - கரீபிய மக்களிடயே, தீபாவளி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. நான் சிறுவனாக இருந்தபோது, அடைய முடியாத இந்த சந்தோசத்தை, தற்போது எனது குழந்தைகளுடன் கொண்டாட உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

தீபாவளி மற்றும் சீக்கியர்களின் புனித பண்டிகையான பந்தி சோர் பண்டிகைக்கான அங்கீகாரம், அமெரிக்காவின் கலாச்சார கட்டமைப்பை செழுமைப்படுத்துவதற்கும், தெற்காசிய புலம்பெயர்ந்தோருக்கு பாராட்டுகளை வளர்ப்பதற்கும் முக்கியமானது என்று சீக்கிய கூட்டணியின் உறுப்பினர் சிம் ஜே சிங் அட்டாரிவாலா கூறி உள்ளார்.

“தீபாவளி தினச் சட்டம், அமெரிக்காவில் எங்களின் இருப்பு, நமது பங்களிப்புகள் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை நிரூபிப்பதாக, இந்தோ-கரீபியன் கூட்டணியின் வாரிய உறுப்பினர் ரிச்சர்ட் டேவிட் கூறி உள்ளார்.

இந்த திருவிழா விடுமுறை குறித்த அறிவிப்பு, அமைதி மற்றும் செழிப்பு - அனைவரும் மதிக்கக்கூடிய மற்றும் பயனடையக்கூடிய விஷயங்களாக இது கருதப்படுவதாக, வட அமெரிக்க இந்துக்களின் கூட்டணியின் தலைவர் நிகுஞ்ச் திரிவேதி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்து அமெரிக்கர்களாகிய நாங்கள், இந்திய துணைக் கண்டம், கரீபியன் தீவுகள் மற்றும் தீபாவளிக்கு அப்பால் நடைபெறும் ஏராளமான கொண்டாட்டங்களைக் கௌரவிக்கும் மசோதாவைக் கண்டு மகிழ்ச்சியடைவதாக, இந்துக்களுக்கான மனித உரிமைகள் கொள்கையின் இயக்குநர் ரியா சக்ரவர்த்தி கூறி உள்ளார்.

அமெரிக்க பள்ளிகளில் “நம் குழந்தைகளை சமமாக நடத்த வேண்டும். நம் குழந்தைகள் மற்ற கலாச்சாரங்களை கொண்டாடுவது போல், மற்றவர்களும் நம் கலாச்சாரத்தை கொண்டாட வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும். பரஸ்பர மரியாதை, பரஸ்பர புரிதல் மற்றும் பரஸ்பர ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றை குழந்தைகளுக்கு கற்பிக்க ஒரே வழி இதுதான்” என்று சர்வதேச அஹிம்சா அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் நீதா ஜெயின் கூறி உள்ளார்.

இதையும் படிங்க: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி! ஆஸ்திரேலியா திட்டவட்டம்!

Last Updated : May 27, 2023, 5:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details