தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நேபாள விமான விபத்து- 22 பேரின் உடல்களும் மீட்பு!

நேபாள தாரா ஏர் விமான விபத்தில் பலியான 22 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நேபாள விமான விபத்து- 22 பேரின் உடல்களும் மீட்பு!
நேபாள விமான விபத்து- 22 பேரின் உடல்களும் மீட்பு!

By

Published : May 31, 2022, 11:59 AM IST

காட்மாண்டூ:நேபாளத்தின் தாரா ஏர் என்ற சிறிய ரக பயணிகள் விமானம் பொக்காரா நகரில் இருந்து புறப்பட்டு 22 நிமிடங்களுக்கு பிறகு கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து நடுவானில் மாயமானது. மறைந்த விமானத்தை 2 ஹெலிகாப்டர்களை கொண்டு தேடும் பணியில் நேபாள ராணுவத்தினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் மே 29 அன்று பனிப்பொழிவு அதிகமாக இருந்த காரணத்தால், தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. மேலும், நேற்று (மே 30) மீண்டும் தேடுதல் தொடங்கப்பட்ட நிலையில், முஸ்தாங் மாவட்டத்தின் சனோஸ்வேர் என்ற பகுதியில் விமானம் விழுந்து கிடப்பதை நேபாள ராணுவம் கண்டறிந்தது. மேலும், விபத்துக்குள்ளான விமானத்தின் சிதறிய உதிரி பாகங்களின் புகைப்படத்தையும் அவர்கள் வெளியிட்டனர்.

இதைத்தொடர்ந்து, மீட்புக்குழுவினர் சிறிய ரக ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். 22 பேரில் 14 பேரின் உடல்களை மட்டும் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ளவர்களின் உடல்களும் இன்று மீட்கப்பட்டன. 22 பேர் சென்ற விமானத்தில் அனைவரும் இறந்து போனது அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய நடத்திய முதற்கட்ட விசாரணையில், சீரற்ற காலநிலை காரணமாக விமானம் இடதுபுறம் திரும்புவதற்குப் பதிலாக வலதுபுறம் திரும்பியதால் மலைகளில் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.

அந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாளிகள் பயணித்தனர். அதில், இந்தியர்கள் நால்வரும் மும்பையின் தானே பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:22 பேருடன் மாயமான நேபாள விமானம் விழுந்த இடம் கண்டுபிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details