தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

’நெருக்கடியிலிருந்து மீண்டு வர அயராமல் உழைத்து வருகிறோம்’ - மஹிந்த ராஜபக்சே - நெறுக்கடி சூழல் குறித்து ராஜபக்சே

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில், மக்களை அமைதிபடுத்தும் விதமாக இலங்கையின் பிரதமர் ராஜபக்சே பேசியுள்ளார்.

’இந்த நெறுக்கடியிலிருந்து மீண்டு வர அயலாமல் உழைத்து வருகிறோம்’ - மஹிந்த ராஜபக்சே
’இந்த நெறுக்கடியிலிருந்து மீண்டு வர அயலாமல் உழைத்து வருகிறோம்’ - மஹிந்த ராஜபக்சே

By

Published : Apr 12, 2022, 8:43 AM IST

இலங்கை(கொழும்பு): இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில், மக்களை அமைதிபடுத்தும் இலங்கையின் பிரதமர் ராஜபக்சே உரையாற்றியுள்ளார். தொடர்ந்து போராடி வரும் மக்களை அவர்களது போராட்டத்தை கைவிட கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், “ நீங்கள் தெருவில் நிற்கும் ஒவ்வொரு நொடியும், நம் நாடு பல டாலர் மதிப்பில் பணத்தை இழந்து வருகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசின் பொருளாதார கொள்கைகள் தான் காரணம்:இதுவரை காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வரும் நிலையில், அந்த நாட்டின் பிரதமர் மக்களை அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அரசாங்கம் இந்த நெருக்கடியை சமாளிக்க அயராது உழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசா, இந்த நெருக்கடிக்கு இலங்கை அரசின் பொருளாதார கொள்கைகள் தான் காரணம் என்று குற்றம் சாட்டிய பின், நாட்டின் பிரதமர் இந்த உரையை வெளியிட்டுள்ளார்.

இந்த நாட்டின் வாழ்வாதார சூழல் மிகவும் மோசமாக வருகிறது என்று சஜித் பிரேமதாசா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மக்கள் அதிபர் ராஜபக்சேவிற்கு நிறைய அவகாசமளித்தும் எந்த முன்னேற்றத்தையும் அவரது அரசாங்கம் காட்டவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: ஆட்சி கவிழ்ந்தது... அரசு இல்லத்தை காலி செய்த இம்ரான் கான்...

ABOUT THE AUTHOR

...view details