தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மலேசியாவில் திடீர் நிலச்சரிவு - 9 பேர் உயிரிழப்பு, 25 பேர் மிஸ்ஸிங் - மலேசியாவில் நிலச்சரிவு

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகில் இருந்த சுற்றுலா முகாம் தளத்தில் இன்று (டிச.16) காலை ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேரைக் காணவில்லை.

Etv Bharatமலேசியாவில் திடீர் நிலச்சரிவு- 9 பேர் உயிரிழப்பு, 25 பேர் காணவில்லை
Etv Bharatமலேசியாவில் திடீர் நிலச்சரிவு- 9 பேர் உயிரிழப்பு, 25 பேர் காணவில்லை

By

Published : Dec 16, 2022, 2:58 PM IST

கோலாலம்பூர்:மலேசியாவில் உள்ள சுற்றுலா முகாம் ஒன்றில் இன்று (டிச.16) ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் மண்ணுக்கடியில் சிக்கியுள்ள 25 பேரை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது. கோலாலம்பூரில் இருந்து வடக்கே 50 கி.மீ தொலைவில் படாங் கலியில் சுற்றுலா முகாம் அமைந்துள்ளது. அப்பகுதியில் 94 பேர் இருந்ததாக அந்நாட்டு காவல்துறை அதிகாரி சுஃபியன் தெரிவித்தார்.

5 வயது சிறுவன் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்ததாகவும், 53 பேர் காயமடைந்துள்ளனர் எனவும், 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுஃபியன் தெரிவித்தார். இதனையடுத்து 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கேம்ப்சைட் ஜென்டிங் ஹைலேண்ட்ஸ் ஹில் ரிசார்ட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு ஆர்கானிக் பண்ணையில் இது அமைந்துள்ளது. இது தீம் பூங்காக்கள் மற்றும் மலேசியாவின் ஒரே கேசினோ கொண்ட பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.

இதையும் படிங்க:அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

ABOUT THE AUTHOR

...view details