வாஷிங்டன்:அவெஞ்சர்ஸ் படம் மூலம் உலக அளவில் பிரபலமானவர் ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர். இவர், கடந்த 1ம் தேதி அன்று புத்தாண்டை முன்னிட்டு தனது வாகனத்தில் ரோஸ்-ஸ்கி தஹோ மவுண்ட் பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு கடும் பனிப் பொழிவினால், ஜெர்மி ரென்னர் ஓட்டிச் சென்ற வாகனம் நிலை தடுமாறி, சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஜெர்மி ரென்னர் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், ஜெர்மி ரென்னரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையிலிருந்து தனது செல்பியை ஜெர்மி ரென்னர் வெளியிட்டுள்ளார். இதன் மூலம், அவர் தனக்காகப் பிரார்த்தனை செய்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு!