டோக்கியோ :ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மீது பைப் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் மீது வெடிகுண்டு வீச முயற்சி செய்த இளைஞரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். வகாயமா மாகாணத்தில் உள்ள சாய்கஸாகி துறைமுகத்திற்கு சென்ற பிரதமர் புமியோ கிஷிடோ அங்குள்ள பொது மக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
பொதுக் கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டு இருந்த போது தீடீரென பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு போன்று ஒன்று வெடித்ததாக கூறப்படுகிறது. உரையாற்றிக் கொண்டு இருந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு அருகில் அந்த வெடிகுண்டு வெடித்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தில் புமியோ கிஷிடா எந்த வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெடிகுண்டு வீசிய நபரை ஜப்பான் பிரதமரின் பாதுகாவலர்கள் மற்றும் போலீசார் சுற்று வளைத்து உடனடியாக கைது செய்தனர். என்ன காரணத்திற்காக ஜப்பான் பிரதமர் மீது வெடிகுண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலை அடுத்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பாதுகாப்பான இடத்திறகு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படிங்க :raigad accident: பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. 8 பேர் பலி; 25 பேர் படுகாயம்!