தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

டிரம்ப்-க்கு எதிராக கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய பரிந்துரை

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்-க்கு எதிராக கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய ஜன.6 குழு பரிந்துரைத்துள்ளது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்க்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்ய பரிந்துரை
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்க்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்ய பரிந்துரை

By

Published : Dec 20, 2022, 3:07 PM IST

Updated : Dec 20, 2022, 3:47 PM IST

வாஷிங்டன்:முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது கிரிமினல் குற்றவழக்கைத் தொடர ஜன.6 குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து குழு தங்களது விசாரணையில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளாவது, அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கு இடையூறாகவும், கிளர்ச்சிக்கும் உதவி அமெரிக்க அரசினை ஏமாற்றியதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் அமெரிக்கத் தலைநகரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பொறுப்பானவர் என்றும்; அவர் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட வேண்டுமென நீதித்துறைக்கு நேற்று(டிச.19) ஜன.6 ஹவுஸ் குழு பரிந்துரைத்தது.

இந்த விசாரணையின் முடிவாய் ஓர் நீண்ட அறிக்கையை ஜன.6 குழு நேற்று(டிச.19) வெளியிட்டது. அதில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது வாக்காளர்களின் நம்பிக்கையை அபகரிக்க பல்வேறு வதந்தி பரப்பும் செயல்களில் ஈடுபட்டதாகவும், நிகழ்ந்த கலவரங்கள் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்றதாகவும் டிரம்ப் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தக் குழுவின் பரிந்துரை ஒருபக்கம் இருக்கையில், இறுதிகட்ட முடிவு என்பது தனி விசாரணை நடத்தி வரும் நீதித்துறையிடம் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டிவிட்டரில் இருந்து எலான் மஸ்க் விலகல்?

Last Updated : Dec 20, 2022, 3:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details