நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை, அதன் உறுப்பு நாடுகள் மாதந்தோறும் ஏற்பது வழக்கம். அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் இந்தியா ஐநா சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதனிடையே ஐநா தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை திறந்து வைக்கப்பட்டது.
கடந்த மார்ச் 2021ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆவது அமர்வில் 2023ஆம் ஆண்டை ‘சர்வதேச திணை ஆண்டு’ (IYM 2023) என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 15), வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐநா சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டெரஸ் உள்பட ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளின் உறுப்பினர்களை தினை அடிப்படையிலான மதிய விருந்துக்கு (Millet Lunch) அழைப்பு விடுத்திருந்தார்.