ஜெருசலேம்:இஸ்ரேலிய வான்படை காசாவின் மத்திய பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் நேற்று (நவ 5) வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
காசா மீது இஸ்ரேல் நடத்தும் இடைவிடாத தாக்குதலை மனிதாபிமானம் அடிப்படையில் இடை நிறுத்தம் செய்யும்மாறு அமெரிக்கா இஸ்ரேலை வலியுறுத்திய நிலையில் இந்த தாக்குதல் நடத்தியுள்ளாதாக தெரிவித்துள்ள்ளது.
முன்னதாக, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டேட் ஆண்டனி பில்ன்கென் முன்னறிவிப்புமின்றி பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தார். பின் நவ் 4ம் தேதி இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமினை சந்தித்து பேசுகையில், ஹமாஸ் பகுதியில் இருந்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்படும் வரை தற்காலிக போர் நிறுத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் உறிது அளித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு காசாவில் அகதிகள் இருக்கும் முகாமில் நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காசாவின் ஜபாலியா பகுதியிலும் இஸ்ரேல் அகதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடதக்கது.
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பலஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கை 9,700ஐ தாண்டியுள்ளது என காசா சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், வெஸ்ட் பாங்க் பகுதியில் நடந்த தாக்குதலில் 140 பாலஸ்தீனவர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 1400 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் 242 பணயக்கைதிகள் இஸ்ரேலில் இருந்து காசாவிற்கு அயுதம் ஏந்திய குழு அழைத்துச் சென்றுள்ளனர். அமெரிக்காவின் ஒப்பந்தம் படி கடந்த 1ம் தேதி முதல் 1,100 மக்கள் காசா பகுதியிலிருந்து கத்தார்,எகிப்து பகுதிகளுக்க்கு வெளியேற்றியுள்ளனர்.
உலகத்தில் காசா மிகப்பெரிய பயங்கரவாத குழுவாக செயல்பட்டு வருவதாகவும், ஆயிரக்கணக்கில் ராக்கெட் மற்றும் ஆயுதங்களை வைத்துள்ளது என அமெரிக்காவின் தூதர் மைகல் தெரிவித்துள்ளார். மேலும், காசாவை சூழ்ந்துள்ள ஆயுதக்குழு பயங்கரவாதிகளையும் பொதுமக்களையும் வேறுபடுத்திப் பார்க்க இஸ்ரேல் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதியில் இராணுவ நடவடிக்கை எடுப்பது மிகவும் கடினமாக உள்ளது எனவும் அப்பகுதியில் இருந்து மக்களை வெளியேற்ற முயற்சித்து வருகிறோம் என தெரிவித்தார். இஸ்ரேல்-ஹமாஸ் போர் விவகாரத்தில் யாரும் நம்பிக்கைகுரியதாக இல்லை எனவும் அமெரிகாவின் முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:விமான நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்… மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் விபரீதம்… ஜெர்மனியில் பரபரப்பு!