தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜெனினில் 9 பாலஸ்தீனியர்கள் கொலை

ஜெனினில் உள்ள அகதிகள் முகாமில் நடைபெற்ற மோதலில் இஸ்ரேலிய படையால் 9 பாலஸ்தீனினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜெனினில் மோதல்
ஜெனினில் மோதல்

By

Published : Jan 27, 2023, 10:54 AM IST

ஜெனின்:பாலஸ்தீனின் ஜெனினில் உள்ள அகதிகள் முகாமில் நேற்று (ஜன 26) தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த மோதலில் 9 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியர்களால் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைனர்.

இதுபோன்ற தாக்குதல்களில் கடந்தாண்டு 150-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும், 2004 ஆம் ஆண்டில் இருந்து எடுக்கப்பட்ட இறப்பு விகிதத்தில் 2022ஆம் ஆண்டிலேயே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இவர்களில் பெரும்பாலானோர் பயங்கரவாதிகள் என்று இஸ்ரேல் தரப்பில் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் 30 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். மோதலால் காயமடந்தவர்களை மீட்க மருத்துவப் பணியாளர்கள் ஜெனின் அகதிகள் முகாமுக்கு வருவதை இஸ்ரேலியப் படைகள் சாத்தியமற்றதாக மாற்றியுள்ளதாகவும், உள்ளூர் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில், இஸ்ரேலியர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதில், குழந்தைகள் மூச்சுத் திணறால் அவதியுற்றதாகவும், மேலும் மருத்துவமனை சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - 11 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details