தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரம்: 12 மணிநேரத்திற்கும் மேலாக தொடரும் ராக்கெட் தாக்குதல்! - ராக்கெட் தாக்குதல்

பாலஸ்தீனத்தின் காசா மீது தொடுத்த இஸ்ரேல் வான்வெளித் தாக்குதலை தொடர்ந்து, தற்போது ஹாமாஸ் பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து 12 மணிநேரமாக ராக்கெட் தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

12 மணிநேரத்திற்கும் மேலாக தொடரும் ராக்கெட் தாக்குதல்
12 மணிநேரத்திற்கும் மேலாக தொடரும் ராக்கெட் தாக்குதல்

By

Published : Aug 6, 2022, 2:42 PM IST

காசா: இஸ்ரேல் - பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக போர் பதற்றம் நிலவி வருகிறது. 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட பாலஸ்தீனத்தை கைப்பற்ற இஸ்ரேல் முயன்று வந்த நிலையில், அதை முறியடிக்கும் பொருட்டு பாலஸ்தீனத்தில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் முளைத்தன.

அந்த பயங்கரவாத அமைப்புகளுள் ஒன்றாக ஹாமாஸ் பயங்கரவாத அமைப்பும் கருதப்படுகிறது. இந்த ஹாமாஸ் அமைப்பு இஸ்ரேலுடன் கடந்த 15 ஆண்டுகளில் நான்கு முறை போரிட்டுள்ளது. மேலும், தொடர்ந்து சிறு சிறு தாக்குதல்கள் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதியில் இஸ்ரேல் ராணுவம் பல மாதங்களாக தொடர்ந்து மேற்கொண்ட ஆப்ரேஷனில், கடந்த வாரம் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் ஒருவரை கைது செய்தது.

இந்த கைதை தொடர்ந்து, இஸ்ரேல் மீது பதில் ராக்கெட் தாக்குதல் நடத்த ஹாமாஸ் தயாராகி வருவதாக கூறி, பாலஸ்தீனத்தின் காசா முனையை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று (ஆக. 5) இரவு வான்வெளி தாக்குதலை தொடுத்தது. இதன் காணொலியை இஸ்ரேல் ராணுவம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இந்த வான்வெளி ராக்கெட் தாக்குதலில், 10 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என பாலஸ்தீன தரப்பில் கூறப்படுகிறது. அதில், பயங்கரவாத அமைப்பின் மூத்தத் தளபதி ஒருவரும், 5 வயது குழந்தையும் உயிரிழந்ததாகவும் பாலஸ்தீன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த வான்வெளித் தாக்குதலை அடுத்த சில மணிநேரங்களில், ஹாமாஸ் அமைப்பும் தனது ராக்கெட் தாக்குதலை தொடங்கியதாக கூறப்படுகிறது.

12 மணிநேரமாக தொடர்ந்து, இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ராக்கெட் தாக்குதல் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து, இஸ்ரேல் ராணுவம் தனது ட்விட்டர் பக்கதில்,"காசாவில் இருந்து இஸ்ரேலிய மக்களின் மீது தொடுக்கப்படும் ராக்கெட் தாக்குதலின் காணொலி இது. பயங்கரவாதம் என்பது இப்படிதான் இருக்கும்..." என பதிவிட்டு ராக்கெட் தாக்குதலின் காணொலியையும் பகிர்ந்துள்ளது.

மேலும், இஸ்ரேலிய பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றுகொண்டிருப்பதாகவும், அவர்களை பயங்கரவாதிகளின் தாக்குதலில் இருந்து நிச்சயம் பாதுகாப்போம் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் சார்பிலும், இஸ்ரேல் சார்பிலும் இரு தரப்பு தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தும், பாதிப்புகள் குறித்தும் முழுமையான தகவலை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:போர் முனைப்பில் சீனா..! எச்சரிக்கும் அமெரிக்கா..! எந்த நேரத்திலும் தைவான் மீது படையெடுக்க வாய்ப்பு...?

ABOUT THE AUTHOR

...view details