தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

"தெரு தெருவாக, வீடு வீடாக சோதனையிட்டு ஹமாஸ் பயங்கரவாதிகள் அழிக்கப்படுவார்கள்" - இஸ்ரேல் பிரதமர்!

Israel Palestine attack : இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிளை வீதி வீதியாக, வீடு வீடாக சென்று சோதனை நடத்தி அழிக்கப் போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.

Israeli PM Netanyahu
Israeli PM Netanyahu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 11:42 AM IST

டெல் அவிவ் : தலைமறைஒவாக உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டை நடத்தி முற்றிலும் அழிக்க உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீனம், காஸா பகுதியில் உள்ள மக்கள் விரைவாக வெளியேறுமாறு ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் நிச்சயம் தரைமட்டமாக்கும் என்றும் அவர் கூறினார். தாக்குதல்களை தீவிரப்படுத்த உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும் செல்லுமாறு அவர் அறிவுறுத்தினார்.

இஸ்ரேலில் உள்ள பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என்று கூட பார்க்காமல் அனைவரையும் ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூரமாகக் கொன்று வருவதாகவும், தாங்க முடியாத வலிகளை கொடுத்த ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு என்ன விலை கொடுத்தேனும் போரில் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.

இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது முழு பலத்தையும் பயன்படுத்தி ஹமாஸ் பயங்கரவாதிகளை முற்றிலுமாக அழிக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், தெரு தெருவாக, வீடு வீடாக சென்று இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பின் தடம் இல்லாத அளவுக்கு அழிக்க உள்ளதாக தெரிவித்தார்.

இந்த சண்டையில் அன்புக்குரியவர்களை இழந்து வாடுபவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்து கொள்வதாகவும், தாக்குதலில் காயமடைந்தவர்கள், பிணைக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்கள் அனைவரும் விரைவில் நலம் பெற வேண்டும் என வேண்டுவதாகவும் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் படையினர் ஆபரேஷன் அல் அக்ஸா ப்ளூட் என்ற பெயரில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். நேற்று (அக். 7) சுமார் 20 நிமிடத்தில் இஸ்ரேல் மீது 5 ஆயிரம் ஏவுகணைகளை கொண்டு ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவமும் தாக்குதலை ஆரம்பித்தது.

ஆபரேஷன் வாள் ஆப் அயர்ன் என்ற பெயரில் இஸ்ரேல் பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் போர் விமானங்கள் மூலம் காசா பகுதியில் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. மேலும், போர் அதிகரிக்கும் சூழல் காணப்படுவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. போர் தொடங்குதாக அவசரநிலையை அறிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தினார்.

இந்த தாக்குதல்களில் குறைந்தது 232 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேல் தரப்பிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தவிர ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் மருவத்துவ அவசர நிலை உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :இஸ்ரேல் பாலஸ்தீன போர் தாக்குதல் - உலகத் தலைவர்கள் கருத்து!

ABOUT THE AUTHOR

...view details