கொரிய பாப் குழுவான BTS 2013ல் பிக் ஹிட் என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் கீழ் அறிமுகமானது. இவர்களின் பாடல் பெரும்பாலும் தனிப்பட்ட மற்றும் சமூக வர்ணனைகளை மையமாக கொண்டதால் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானது. மேலும் இக்குழுவில் உள்ள அனைவரும் பாலின பாகுபாடுகளுக்கு எதிராக காதணி அணிந்து , உதடுகளில் வர்ணம் பூசிக் கொள்வது உண்டு.
பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு இக்குழு உச்சத்தை தொட்டதால் , இவர்களுக்கு 2k கிட்ஸ் ரசிகர்கள் ஏராளம்... BTS இசைக்குழு இதுவரை 6 அமெரிக்க இசை விருதுகள், 24 கோல்டன் டிஸ்க் விருதுகள் மற்றும் அவர்களின் படைப்புகளுக்கு ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் குழுவாக அவர்களின் 9ஆவது ஆண்டு நிறைவை "ஃபெஸ்டா" என கொண்டாடினர். அப்போது குழு உறுப்பினர் Kim Nam-joon நாங்கள் இனி எந்த வகையான குழுவாக இருக்கிறோம் என்று தெரியவில்லை எனவும் குழுவில் அனைவரும் சோர்வாகி விட்டதாகவும் தெரிவித்தார்.