தெஹ்ரான்:ஈரான் நாடு முழுவதும் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்துவரும் சூழலில் ஈரான் நடிகையான தாரனே அலிதூஸ்டி பொய்யான தகவலை பரப்பியதாக அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட தகவல் பொய்யானது என்றும் அதற்கான ஆதாரங்கள் அவரிடம் கிடையாது என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருது பெற்ற ‘தி சேல்ஸ்மேன்’ திரைப்படத்தில் நடித்தவர் தாரனே அலிதூஸ்டி. ஈரான் போராட்டக்காரார் மொஹ்சென் ஷேகரி அரசால் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டதை எதிர்த்து அவர் கருத்து தெரிவித்திருந்தார். அதில் “அனைத்து சர்வதேச அமைப்புகளும் இந்த ரத்த வெல்லத்தைப் பார்த்தும். எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது.