ஆஸ்லோ :அமைதிக்கான நோபல் பரிசு ஈரானின் பெண் சமூக செயற்பாட்டாளர் நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான நோபல் பரிசு கடந்த அக்டோபர் 2ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதில், ஈரானில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்தும், மனித உரிமைகள் மற்றும் பெண் சுதந்திரத்திற்காவும் போராடியதற்காக ஈரானைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நர்கீஸ் முகமதிக்கு 2023 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி அறிவித்து உள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அலெஸ் பியாலியாட்ஸ்கியுடன், ரஷ்யாவின் மனித உரிமைகள் அமைப்பான மெமோரியல் மற்றும் உக்ரைனின் மனித உரிமைகள் அமைப்பான சென்டர் பர் சிவில் லிபர்ட்டீஸ் ஆகியவற்றுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அக்டோபர் 2 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளுக்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், இன்று (அக்.6) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
அதில், ஈரானை சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரானின், ஜான்ஜான் பகுதியில் பிறந்த நர்கீஸ் முகமதி, பெண்களுக்கு எதிரான அடக்குமுறை, அனைவருக்குமான சுதந்திரம், மனித உரிமைகளுக்காக போராடியதற்காக ஈரானிய அரசால் 13 முறை கைது செய்யப்பட்டும், ஐந்து முறை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.
மேலும், 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனை பெற்ற நர்கீஸ் முகமதிக்கு இதுவரை 154 கசை அடிகள் வழங்கப்பட்டன. மேலும் இன்னும் நர்கீஸ் முகமதி சிறைவாசத்திலேயே உள்ளார். இந்நிலையில், தான் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மருத்துவத்துக்கான நோபல் பரிசு எம்ஆர்என்ஏ (mRNA) கரோனா தடுப்பூசி உருவாக்கத்திற்கான அடிப்படையாக கருதப்படும் நியூக்லியோசைடின் மாற்றம் குறித்த தொழிநுட்பத்தை கண்டுபிடித்ததற்காக கடாலின் கரிகோ மற்றும் ட்ரூவ் வைஸ்மேன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு விஞ்ஞானிகள் பியரி அகோஸ்தினி, பெரெங்க் க்ரவுஸ் மற்றும் அன்னி எல் ஹூலியர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.
பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியில் அட்டோசெகன்ட் அதிர்வுகளை உருவாக்கும் சோதனை முறையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இலக்கியத்திற்கான நோபல் பரிசி நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஜான் ஃபோர்ஸ்க்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :ஆசிய விளையாட்டில் இந்தியா பதக்க அறுவடை! எந்ததெந்த விளையாட்டுல என்னென்ன பதக்கம் தெரியுமா?