தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஐஎன்எஸ் சுமேதா இந்தோனேஷியாவுக்கு பயணம் - இந்திய கடற்படை ரோந்து கப்பல்கள்

இந்திய கப்பற்படையின் தொலைதூர பணி ஈடுபாட்டின் ஒரு பகுதியாக ஐஎன்எஸ் சுமேதா பாலியில் உள்ள தான்ஜூன் பினோவா துறைமுகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

ins-sumedha-visits-bali-indonesia
ins-sumedha-visits-bali-indonesia

By

Published : Aug 5, 2022, 4:11 PM IST

பாலி: தென்கிழக்கு இந்திய பெருங்கடலில் இந்திய கப்பற்படையின் தொலைதூர பணி ஈடுபாட்டின் ஒரு பகுதியாக ஐஎன்எஸ் சுமேதா இந்தோனேஷியாவின் பாலியில் உள்ள தான்ஜூன் பினோவா துறைமுகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த பயணம் ஆகஸ்ட் 6 வரையில் நீடிக்கிறது. அதோடு சுமேதா கப்பல் இந்திய சுதந்திர தினம் மற்றும் சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுப் பெருவிழா கொண்டாட்டம் ஆகியவற்றுடன் இணையும் வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகர கடல்பகுதிக்கும் செல்லவிருக்கிறது.

நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துதல், ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், இந்தோனேஷிய கப்பற்படையுடன் இணைந்த செயல்பாட்டை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு பாலி பயணம் அமைந்துள்ளது. இந்த கப்பல் பாலியில் இருக்கும் போது இந்திய கடற்படை அலுவலர்கள் தொழில்முறை ரீதியாக அந்நாட்டு அலுவலர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார்கள்.

அந்நாட்டு கப்பல்களை பார்வையிடுவார்கள். இந்தோனேஷிய கடற்படை அலுவலர்களுடன் விளையாட்டு நிகழ்வுகளிலும் பங்கேற்பார்கள்.மேலும் ஐஎன்எஸ் சுமேதா உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கடற்படை ரோந்து கப்பலாகும். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணத்தில் உள்ள இந்திய கப்பற்படையின் கிழக்கு பிரிவின் ஒரு பகுதியாக இந்த கப்பல் உள்ளது.

இதையும் படிங்க:சீனாவின் 3ஆவது விமானம் தாங்கி கப்பல் அறிமுகம்

ABOUT THE AUTHOR

...view details