தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்தியாவின் ஐநா தூதர் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 62வது அமர்வின் தலைவராக பொறுப்பேற்பு! - ஐக்கிய நாடுகள்

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஏறக்குறைய ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய பிரதிநிதி ஒருவர் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 62வது அமர்வின் தலைவராக பொறுப்பேற்று உள்ளார்.

இந்தியாவின் ஐ.நா., தூதர் ருசிரா கம்போஜ் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 62வது அமர்வின் தலைவராக பொறுப்பேற்பு!
இந்தியாவின் ஐ.நா., தூதர் ருசிரா கம்போஜ் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 62வது அமர்வின் தலைவராக பொறுப்பேற்பு!

By

Published : Jul 28, 2023, 10:53 AM IST

Updated : Jul 28, 2023, 11:27 AM IST

ஐக்கிய நாடுகள்: ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி, தூதர் ருசிரா காம்போஜ், கிட்டத்திட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, சமூக மேம்பாட்டு ஆணையத்தின் (CSocD) 62வது அமர்வின் தலைவராகப் பொறுப்பேற்று உள்ளார்.

இது தொடர்பாக தூதர் ருசிரா காம்போஜ் வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது, “இந்த தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது மற்றும் அதன் முக்கிய கொள்கைகளுடன் வழிநடத்துவதில் உறுதியுடன் உள்ளது. உலகளாவிய சமூகத்தின் நலன் மற்றும் செழிப்புக்காக விடாமுயற்சியுடன் உழைக்க உள்ளேன்” என குறிப்பிட்டு உள்ளார்.

ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு வெளியிட்டு உள்ள அறிக்கையில், சமூக மேம்பாட்டு விஷயங்களில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் முதன்மை கவனம் செலுத்துவதன் மூலம், காம்போஜ் இந்த பங்கை ஏற்றுக் கொள்கின்றார். இது பிப்ரவரி 15ஆம் தேதி அன்று சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 62வது அமர்வின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு "முக்கியமான சந்தர்ப்பம்" என்பதைக் குறிக்கிறது. ஏனெனில், 1975க்குப் பிறகு சமூக மேம்பாட்டு ஆணையத்திற்குள் இந்தியா இந்த நிலையை எட்டி இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தூதர் தலைமையிலான இந்த அமர்விற்கு லக்சம்பர்க், வடக்கு மாசிடோனியா, டொமினிகன் குடியரசு உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து உள்ளனர்.

சமூகக் கொள்கைகள் மூலம் சமூக மேம்பாடு மற்றும் சமூக நீதியை வளர்ப்பது, நிலையான வளர்ச்சிக்கான 2030 முன்னோக்கிய நிரலை செயல்படுத்துவதற்கான முன்னேற்றத்தை விரைவுபடுத்துதல் மற்றும் வறுமை ஒழிப்பு என்ற மேலோட்டமான இலக்கை அடைதல் என்பதே, இந்த 62வது அமர்வின் மையக் கருப்பொருள் ஆகும். சமூக மேம்பாட்டிற்கும், சமூக நீதிக்கும் இடையே உள்ள முக்கிய தொடர்பை இந்த மைய கருப்பொருள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

காம்போஜ் தலைமைப் பொறுப்பை ஏற்ற நிலையில், சமூக சவால்களை எதிர்கொள்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தலைசிறந்த அரசுகளுக்கிடையேயான அமைப்பாக கமிஷனின் முக்கிய பங்கு உள்ளது என்று காம்போஜ் வலியுறுத்தி உள்ளார். ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு (ECOSOC) பொதுத் தன்மையின் சமூகக் கொள்கைகள் மற்றும் குறிப்பாக, சிறப்பு அரசுகளுக்கிடையேயான நிறுவனங்களால் உள்ளடக்கப்படாத சமூகத் துறையில் உள்ள அனைத்து விஷயங்களிலும் ஆலோசனை வழங்குவதே இந்த ஆணையத்தின் நோக்கம் ஆகும்.

இந்த ஆணையத்தில் 46 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் நான்கு வருட காலத்திற்கு ECOSOC அமைப்பால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 62வது அமர்வில் இந்தியா தலைமைப் பொறுப்பில் உள்ளது. அதன் பதவிக்காலம் 2027இல் முடிவடைய உள்ளது.

1995ஆம் ஆண்டில் கோபன்ஹேகனில் நடந்த சமூக மேம்பாட்டுக்கான உலக உச்சி மாநாட்டிலிருந்து, ஐநா கோபன்ஹேகன் பிரகடனம் மற்றும் செயல்திட்டத்தின் பின்தொடர்தல் மற்றும் செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை சமூக மேம்பாட்டுக்கான ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

1995ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் கோபன்ஹேகனில் நடைபெற்ற சமூக மேம்பாட்டுக்கான உலக உச்சி மாநாட்டில் (WSSD), வளர்ச்சியின் மையத்தில் மக்களை வைக்க வேண்டியதன் அவசியத்தில் அரசாங்கங்கள் புதிய ஒருமித்த கருத்தை எட்டின. வறுமையை வெற்றி கொள்வது, முழு வேலைவாய்ப்பின் குறிக்கோளாக மாற்றுவது மற்றும் சமூக ஒருங்கிணைப்பை வளர்ப்பது ஆகியவை வளர்ச்சியின் நோக்கங்களாக உலக உச்சி மாநாட்டில் உறுதியளித்தது.

இதையும் படிங்க: பிலிப்பைன்ஸில் படகு கவிழ்ந்து விபத்து - மீட்புப் பணிகள் தீவிரம்

Last Updated : Jul 28, 2023, 11:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details