டோரன்டோ: கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் 21 வயதான இந்தியர் கார்திக் வாசுதேவ் கல்லூரி பயின்று வந்தார். இவர் பகுதி நேரமாக பணி செய்துக்கொண்டே படித்து வந்துள்ளார். இந்நிலையில் செயிண்ட் ஜோசப் டவுணில் உள்ள டிடிசி ஸ்டேஷன் வாசல் முன்பாக வியாழக்கிழமை (ஏப்.7) கல்லூரி மாணவர் கார்த்திக் வாசுதேவ் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய மாணவருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து கார்த்திக் வாசுதேவ்வின் மூத்த சகோதர் கூறுகையில், “கார்த்திக் வாசுதேவ் ஜனவரி மாதம் தான் கல்லூரி படிப்பிற்காக கனடா சென்றார். அங்குள்ள செனேகா கல்லூரியில் படித்துவந்தார்” என்றார். கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : தலைதூக்கிய வன்முறை கலாசாரம், கனடாவில் துப்பாக்கிகளுக்குத் தடை!