தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பச்சிளம் குழந்தைகளை கொன்ற கொடூர நர்ஸ் - இந்திய வம்சாவளி மருத்துவரிடம் சிக்கியது எப்படி? - மருத்துவர் ரவி ஜெயராம்

ஏழு பச்சிளம் குழந்தைகளை செவிலியர் கொன்ற விவகாரம் தொடர்பாக காவல் துறை முன்னரே நடவடிக்கைகளை துவக்கி இருந்தால், சில உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும் என்று இந்திய வம்சாவளி மருத்துவர் ரவி ஜெயராம் தெரிவித்து உள்ளார்.

பச்சிளம் குழந்தைகளை கொன்ற கொடூர நர்ஸ் - இந்திய வம்சாவளி மருத்துவரிடம் சிக்கியது எப்படி?
பச்சிளம் குழந்தைகளை கொன்ற கொடூர நர்ஸ் - இந்திய வம்சாவளி மருத்துவரிடம் சிக்கியது எப்படி?

By

Published : Aug 19, 2023, 3:57 PM IST

லண்டன்:இங்கிலாந்து நாட்டில் சமீபகாலமாக பச்சிளம் குழந்தைகள் அதிக அளவில் மரணம் அடைந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்நாட்டின் வடக்குப் பகுதியில் இயங்கி வரும் குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளி மருத்துவரின் உதவியால், அந்த கொடூர செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் செஸ்டர் நகரில் செயல்பட்டு வரும் செஸ்டர் மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக உள்ளவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவி ஜெயராம். இந்த மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் லூசி லெட்பி (33). இவர் நேரடியாக 7 பச்சிளம் குழந்தைகளையும் கொடூரமாக கொலை செய்து உள்ளார். மேலும் 6க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொடூரமாக கொலை செய்ய முயற்சி மேற்கொண்டு இருந்ததாக இவர் மீது தொடரப்பட்ட வழக்கு, மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக லூசி லெட்பி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர் ரவி ஜெயராமின் பங்கு அளப்பரியது என்றுதான் கூற வேண்டும். அவர் இது தொடர்பாக முக்கிய தகவல்களை திரட்டி லெட்பி கைது செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்து உள்ளார்.

இது தொடர்பாக ஊடகத்திற்கு பேட்டி அளித்த மருத்துவர் ரவி ஜெயராம் கூறியதாவது, “இந்த விவகாரத்தில் நாம் முன்னரே விரைந்து செயல்பட்டு இருந்தால் சில உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். 4 முதல் 5 குழந்தைகள் இந்நேரம் பள்ளிக்குச் செல்லும் வயதை எட்டி இருக்கும்.

கடந்த 2015ஆம் ஆண்டில், 3 குழந்தைகள் மர்மமான முறையில் மரணம் அடைந்த போதே இது குறித்து விழிப்பு அடைந்திருக்க வேண்டும். பச்சிளம் குழந்தைகளின் மரணம் தொடர்கதை ஆன நிலையில்தான் மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகம் விழித்துக் கொண்டது. 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேசிய சுகாதாரத்துறை மருத்துவர்களைச் சந்திக்க காவல் துறைக்கு அனுமதி வழங்கியது.

2015 மற்றும் 2016 காலத்தில், செஸ்டர் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நலப் பிரிவில் 13 பச்சிளம் குழந்தைகள் மீது செவிலியர் லெட்பி கொடூர தாக்குதல் நடத்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்து உள்ளது. வெறும் காற்றை, ஊசியில் ஏற்றி, அதை குழந்தைகளுக்கு செலுத்துவது, இன்சுலின் மருந்தை குழந்தைகளின் ரத்த ஓட்டத்தில் கலக்கச் செய்வது, அதிக அளவிற்கு பால் மற்றும் திரவப் பொருட்களை புகட்டுவது உள்ளிட்ட தாக்குதல்களை பச்சிளம் குழந்தைகளிடம் அவர் அரங்கேற்றி உள்ளார்” என தெரிவித்தார்.

மேலும், குழந்தைகளை கொடூரமாக கொலை செய்திருந்த போதிலும், அவர்கள் இயற்கையான முறையிலேயே மரணம் அடைந்து இருப்பதாக சக பணியாளரக்ளை லெட்பி நம்ப வைத்து உள்ளார் என்றும், இது போன்ற விசித்திரமான வழக்கை, தான் கண்டதில்லை என்று நீதிபதி தெரிவித்து உள்ளார்.

மருத்துவமனையின் தோல்விகளை மறைக்கவே தன் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருப்பதாக நீதிமன்றத்தில் விசாரணையின்போது லெட்பி தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Vivek Ramaswamy: டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடும் இந்தியர்.. ரஷ்யா குறித்து கூறியது என்ன?

ABOUT THE AUTHOR

...view details