தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மூன்றாவது முறையாக கிராமி விருது வென்ற இந்திய இசையமைப்பாளர்!!

இந்தியாவை சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக கிராமி விருது வென்றுள்ளார்.

மூன்றாவது முறையாக கிராமி விருது வென்ற இந்திய இசையமைப்பாளர்
மூன்றாவது முறையாக கிராமி விருது வென்ற இந்திய இசையமைப்பாளர்

By

Published : Feb 6, 2023, 10:39 AM IST

Updated : Feb 6, 2023, 10:44 AM IST

லாஸ் ஏஞ்சல்ஸ்:அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறந்த ஆடியோ ஆல்பம் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜினின் டிவைன் டைட்ஸ் ஆல்பம் விருது பெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், தனது ‘டிவைன் டைட்ஸ்’ என்ற ஆல்பத்திற்காக மூன்றாவது முறையாக கிராமி விருது வென்றுள்ளார்.

இதற்கு முன்பு 2015ஆம் ஆண்டு விண்டஸ் ஆஃப் சம்சாரா என்ற பாடலுக்காகவும், 2022ஆம் ஆண்டு புதிய ஆல்பம் பிரிவில் டிவைன் டைட்ஸ் ஆல்பத்திற்காகவும் இரு முறை கிராம விருதை வென்று இருந்தார். கிராமி விருதினை தனது ஆல்பத்தில் சேர்ந்து இசையமைத்த ஸ்டிவர்ட் கோப்லண்ட் என்பவருடன் பகிர்ந்து கொண்டார்.

65-வது ஆண்டு கிராமி விருது நிகழ்ச்சியில், சிறந்த ஆடியோ ஆல்பம் வெற்றியாளர் பிரிவில் கிராமாபோன் கோப்பையை ரிக்கி கேஜ் பெற்றார். கிராமி ரெக்கார்டிங் அகாடமி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘டிவைன் டைட்ஸ்’ கிராமி விருது வென்ற ரிக்கி கேஜ், ஸ்டிவர்ட் கோப்லண்ட் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பம் ஒன்பது பாடல்களை கொண்டது. ரிக்கி கேஜ் 2015 மற்றும் 2022ஆம் ஆண்டு இரு முறை கிராம விருது வாங்கிய நிலையில், கோப்லாண்ட் ஐந்து முறை கிராமி விருது வென்றுள்ளார். அதே சமயம், கேஜ்ஜுடன் சேர்ந்து வெல்வது இது இரண்டாவது முறையாகும்.

இதையும் படிங்க:இந்திய - பிரிட்டன் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில் ரிஷி சுனக் சிறப்புரை!

Last Updated : Feb 6, 2023, 10:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details