தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

IND Vs WI: 3 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இந்திய அணி - Indian team

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 - 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

IND Vs WI: 3 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இந்திய அணி அபார ஆட்டம்!
IND Vs WI: 3 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இந்திய அணி அபார ஆட்டம்!

By

Published : Jul 28, 2022, 8:25 AM IST

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது இந்நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரன்கள் குவித்து வந்தனர். ஷிகர் தவான் 50 ரன்களை கடந்த நிலையில், இந்த ஜோடி 100 ரன்கள் சேர்த்தது.

இந்தியாவின் அபார பேட்டிங்:தொடர்ந்து ஷிகார் தவான் 58 ரன்கள் எடுத்திருந்தபோது, வால்ஷ் பந்துவீச்சில் பூரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார். இதனிடையே இந்திய அணி 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்திருந்த போது, மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் தடைப்பட்டது.

இதனால் போட்டி தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய இந்திய வீரர்களில், பவுண்டரிகளாக விளாசி வந்த ஷ்ரேயஸ் ஐயர் 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சுப்மன் கில், சதத்தை நெருங்கி வந்தார். இந்திய அணி 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருந்தபோது, மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.

IND Vs WI: 3 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இந்திய அணி அபார ஆட்டம்!

சுப்மன் கில் 98 ரன்களுடன் களத்தில் இருந்தார். மேலும் தொடர்ந்து ஆட்ட நேரம் மழையால் பாதிக்கப்பட்டதால், இந்திய அணி 36 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்தது. இதனால் டி.எல்.எஸ் விதிப்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 35 ஓவர்களில் 257 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து தொடக்க வீரர்களாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் ஹோப், கைல் மேயெர்ஸ் களமிறங்கினர். தொடக்கத்தில் கைல் மேயெர்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும், பின்னர் வந்த ப்ரூக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் சிராஜ் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக இறங்கிய பிராண்டன் கிங், சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார்.

மறுபுறம் ஷாய் ஹோப் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் நிக்கோலஸ் பூரன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அணியின் ஸ்கோர் 74 ரன்னாக இருந்த போது, பிராண்டன் கிங் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நிக்கோலஸ் பூரன் 42 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்களும் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 26 ஓவர்கள் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் எடுத்தது. இதனால் 119 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 - 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதில் இந்தியா சார்பில் சாஹல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்திய கிரிக்கெட் அணிக்கு மனத்தத்துவ பயிற்சியாளராக பேடி உப்டான் நியமனம்!

ABOUT THE AUTHOR

...view details