தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக லக்ஷ்மன் நரசிம்மன் நியமனம்

புகழ்பெற்ற ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Indian born CEO of Starbucks  CEO of Starbucks  Starbucks  Laxman Narasimhan  Laxman Narasimhan CEO of Starbucks  ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் CEO  இந்திய வம்சாவளி  லக்‌ஷ்மன் நரசிம்மன்  காஃபீ நிறுவனமான ஸ்டார்பக்ஸ்  தலைமை செயல் அதிகாரி
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் CEO

By

Published : Sep 2, 2022, 9:20 AM IST

வாஷிங்டன்: உலகின் மிகப்பெரிய காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், இந்திய வம்சாவளியை சேர்ந்த லக்‌ஷ்மன் நரசிம்மனை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்ளது. நரசிம்மன், உடல்நலம் மற்றும் சுகாதார நிறுவனமான ரெக்கிட்டின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிவர். இவர் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொறுப்பேற்கவுள்ளார்.

மைக்ரோசாப்டின் சத்யா நாதெல்லா, ஆல்பாபெட்டின் சுந்தர் பிச்சை, அடோப்பின் சாந்தனு நாராயண், டெலாய்ட்டின் புனித் ரென்ஜென் மற்றும் ஃபெடெக்ஸின் ராஜ் சுப்ரமணியம் போன்ற முன்னணி அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தலைமை தாங்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தோருடன் பட்டியலில் நரசிம்மன் சேர்ந்துள்ளார்.

55 வயதான நரசிம்மன் புனே பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். அதன்பின் பென்சில்வேனியா பல்கலைக்கழக முதுகலைப் பட்டமும், MBA பட்டமும் பெற்றார். அதன்பின் ரெக்கிட் பென்கிசர், லைசோல் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார்.

இதையும் படிங்க: அமெரிக்க ஆலோசனைக் குழுவில் 2 இந்திய வம்சாவளியினர்

ABOUT THE AUTHOR

...view details