அமெரிக்காவில் பீகார், ஜார்கண்ட் அசோசியேஷன் ஆஃப் வட அமெரிக்கா (BJANA) என்ற அமைப்பு கலிபோர்னியா, அரிசோனா, கனெக்டிகட், மாசசூசெட்ஸ், நியூ ஜெர்சி, டெக்சாஸ், வட கரோலினா மற்றும் வாஷிங்டன் டிசி உட்பட பல மாநிலங்களில் 'சத் பூஜை' திருவிழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, நேற்று (அக்.30) நடந்த சத் பூஜையில் தாம்சன் பார்க், மன்ரோ, நியூ ஜெர்சி உட்பட்ட பகுதிகளில் 1,500 உறுப்பினர்கள் கொண்டாடினர். முன்னதாக, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு BJANA அமைப்பினர் சிறப்பாக இவ்விழாவைக் கொண்டாடி இருந்தது.
'ஒவ்வொரு ஆண்டும் புலம்பெயர்ந்தவர்களால் இந்த விழா கொண்டாடி வருகிறோம். முன்னதாக, நாங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சத் பூஜையைக் கொண்டாடிய நிலையில் தற்போது வரை அதிக எண்ணிக்கையில் எங்கள் அமைப்பில் இணைந்துள்ளனர். இன்று 1500-க்கும் மேற்பட்டோர் இதனைக் கொண்டாடினர்' என்று BJANA-ன் சமூக உறுப்பினர் வந்தனா வத்ஸ்யன் கூறினார். சூரிய பகவானுக்காகக் கொண்டாடப்படும் இப்பண்டிகை பீகார், ஜார்கண்ட், கிழக்கு உத்தரபிரதேசத்தில் மிகவும் பிரபலான ஒன்று. இதனைக் கொண்டாடுவதன் மூலம் சூரியனிடம் ஆசீர்வாதம் பெற்று, பூமியில் உயிர்களை நீண்ட காலத்திற்கு வாழ வழிசெய்யும் என்று நம்பப்படுகிறது.