தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

Vivek Ramaswamy: டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடும் இந்தியர்.. ரஷ்யா குறித்து கூறியது என்ன?

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தோல்வி அடைய செய்வது நமது இலக்காக இருக்கக் கூடாது, அமெரிக்கா வெற்றி பெற வேண்டும் என கூறியுள்ளார், இந்திய வம்சாவழியை சோ்ந்த அமெரிக்க எம்.பி.யான விவேக் ராமசுவாமி. அமொிக்க அதிபர் தேர்தலுக்கான ரேசில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து களமிறங்கியுள்ளார் இவர்.

Vivek Ramaswamy
Vivek Ramaswamy

By

Published : Aug 19, 2023, 1:13 PM IST

வாஷிங்டன் டிசி (USA): இந்தியா வம்சாவழியை சேர்ந்த அமெரிக்காவின் எம்.பி விவேக் ராமசுவாமி ஆகஸ்ட் 9, 1985ல் இந்தியாவின் கேரளாவில் பிறந்தார். இவரது பெற்றோர் கேரளாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். நிக்கி ஹேலி மற்றும் ஹிர்ஷ் வர்தன் சிங் ஆகியோர் வரிசையில் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருக்கும், மூன்றாம் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர் விவேக் ராமசுவாமி ஆவாா் இவர் அடுத்த ஆண்டு அமொிக்காவில் நடைபெற உள்ள அதிபர் பதவிக்கான தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்காக, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடுகிறார்.

மற்ற அமெரிக்கத் தலைவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட நடவடிக்கையில் இந்தியா வம்சாவழியை சோ்ந்த அமொிக்க எம்.பி விவேக் ராமசுவாமி ஈடுபட்டுள்ளார். இந்தியா வம்சாவழியை சோ்ந்த அமெரிக்க எம்.பி விவேக் ராமசுவாமி, ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சில பகுதியான டான்பாஸ் பிராந்தியம் மற்றும் கெய்வ் ஆகியவற்றை நேட்டோ (NATO) படையில் சோ்க்க கூடாது மேலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சீனாவுடனான தனது இராணுவக் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் இதன் மூலம் ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வர முடியும் என தொிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்பை எதிர்த்து இந்திய வம்சாவழியை சேர்ந்த பயோடெக் தொழில் அதிபர் விவேக் ராமசுவாமி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. “புடின் சீனாவுடனான தனது இராணுவக் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் உக்ரைன் போரை நான் முடிவுக்குக் கொண்டுவருவேன். ரஷ்யா தோல்வியடைவதே குறிக்கோளாக இருக்கக்கூடாது. அமெரிக்கா வெற்றி பெற வேண்டும்” என்பது நமது இலக்காக இருக்க வேண்டும் என விவேக் ராமசுவாமி தனது டவிட்டர் (X) பக்கத்தில் கூறினார்.

விவேக் ராமசுவாமி CNN க்கு அளித்த பேட்டியில், ரஷ்யா-சீனா இராணுவக் கூட்டணியை அமெரிக்காவிற்கு மிகப்பெரிய இராணுவ அச்சுறுத்தல் என்று தொிவித்தார், மேலும் ஜனாதிபதியாக பதவியேற்றால் மாஸ்கோவிற்கு செல்வேன் எனவும் தொிவித்தார். 1972ஆம் ஆண்டு நிக்சன் சீனா சென்றது போல் நான் மாஸ்கோவிற்கு சென்று சீனாவுடனான இராணுவக் கூட்டணியிலிருந்து ரஷ்யாவை வெளியேற்ற முயற்சிகளை மேற்கொள்வேன் என தொிவித்தார்.

உக்ரைனுடனான அமெரிக்க ஈடுபாடுகள் ரஷ்யாவை சீனாவுடன் இணைக்கிறது. ரஷ்யா-சீனா இராணுவக் கூட்டணி இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய இராணுவ அச்சுறுத்தலாகும். ஹைப்பர்சோனிக் ஏவுகணை திறன்கள், ரஷ்யாவில் அணுசக்தி திறன்கள் மேலும் சீனாவின் கடற்படை திறன்கள் நம்மை விட முன்னால் உள்ளன. ஒரு பொருளாதாரத்துடன் இணைந்து நவீன வாழ்க்கை முறையை சார்ந்து நாம் இருக்கிறோம். தற்போது அந்த இரண்டு நாடுகளும் ஒன்றோடொன்று இராணுவ கூட்டணியில் இருப்பது மிகவும் மோசமான நிலையை உருவாக்கும். இதை பற்றி எந்த அரசியல் கட்சியிலும் யாரும் பேசுவதில்லை என கூறினார்.

"புடின் தோற்கடிக்கப்பட வேண்டும்" என்பதில் கவனம் செலுத்தக்கூடாது, மாறாக "அமெரிக்கா வெற்றி பெற வேண்டும்" என்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும் மேலும் எனது வெளியுறவுக் கொள்கையின் படி ரஷ்யா - சீனா கூட்டணியை பலவீனப்படுத்துவதை மையமாகக் கொண்டுள்ளது. தற்போது உள்ள கட்டுப்பாட்டுக் கோடுகளை மாற்றி டான்பாஸ் பிராந்தியத்தின் சில பகுதிகளிலும், உக்ரைனிலும் நேட்டோ (NATO) படைகள் இருக்காது என உறுதியளிப்பேன் என தொிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details