வாஷிங்டன்:இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு மூலம் 21ஆம் நூற்றாண்டை வரையறுக்க முடியும் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினருமான ரோ கன்னா கூறியுள்ளார். அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான 'தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழில் வெளிவந்த கட்டுரையை மேற்கோள் காட்டி கூறியுள்ளார்.
இக்கட்டுரை குறித்து அவரது ட்விட்டரில், ‘இந்தியாவின் வளர்ந்து வரும் நம்பிக்கை மற்றும் முரண்பாடுகள் பற்றி அந்த நாளிதழில் அழகாக எழுதியுள்ளனர். மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரால் பொறிக்கப்பட்ட பன்மைத்துவம், அதன் மறைமுகமானவற்றின் அழிக்க முடியாத பகுதியாகும் என்ற நம்பிக்கையூட்டும் வகையில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கன்னா குறிப்பிட்டிருந்த கட்டுரையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், 'மிக ஆழமாக மேற்கத்திய நாடுகளாக இருக்கும் ஒரு உலக ஒழுங்கு முறையானது, உக்ரைனில் நடந்த போரின் தாக்கத்தால் அவசரப்பட்டு செயல்படும் பல நாடுகளைச் சேர்ந்த உலகமாக மாற்றப்பட்டு வருகிறது’ என குறிப்பிட்டிருக்கிறார். இச்செயல் மூலம் அவர்களின் சொந்த குறிப்பிட்ட கொள்கைகள் மற்றும் விருப்பங்கள் மற்றும் ஆர்வங்களை தேர்வுசெய்வதாகவும் கூறினார், ரோ கன்னா.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு, ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டிக்க ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அழுத்தத்தை இந்தியா நிராகரித்தது. ரஷ்யாவின் மாஸ்கோவை அதன் மிகப்பெரிய எண்ணெய் சப்ளையராக இந்தியா மாற்றியது மற்றும் மேற்கு உலகின் பாசாங்குத்தனத்தை நிராகரித்தது எனவும் நாளிதழின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:இந்தியாவின் அறிவியல் தற்சார்பை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி