அபுதாபி: இந்தியா குளோபல் ஃபோரம், ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று(டிச.12) தொடங்கியது. இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள முன்னணி அரசியல், வணிக மற்றும் கலாச்சார ஆளுமைகளை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சியாகும். இது வரும் 16ஆம் தேதி வரை, துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறவுள்ளது. இந்தியா ஜி20 தலைமையை ஏற்ற பிறகு நடக்கும் முதல் சர்வதேச நிகழ்ச்சி இது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா மற்றும் யுஏஇயின் உறவுகள் மேம்பட்டு வருவதாகவும், அதைப் பயன்படுத்தி உலகத்தை வடிவமைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
அப்போது பேசிய ஜெய்சங்கர், "இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே நீண்ட காலமாக சுமூகமான உறவுகள் இருக்கின்றன. இந்த நட்புறவைப் பயன்படுத்தி மாறிவரும் உலகை வடிவமைக்க முடியும். இருநாடுகளும் பல்வேறு வகையிலான லட்சிய உறவுகளை கொண்டுள்ளதாகவும், இதை மேலும் மேம்படுத்தினால் அது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன்.