டெல்லி:இந்தியா மற்றும் கனடா வரலாற்றில் இல்லாத நிகழ்வாக, சமீப காலமாக இருநாடுகளிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கனடா வாழ் இந்தியரும், சீக்கிய பிரிவினைவாதத் தலைவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலைச் சம்பவத்தில் இந்தியாவும் சம்பந்தப்பட்டுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வந்தது, இந்தியா. முன்னதாக நிஜ்ஜார் பயங்கரவாத அமைப்பினை சேர்ந்தவர் என்றும், பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் அறிவித்திருந்தது.
இரு நாடுகளிடையே மோதல் போக்கு அதிகரித்த நிலையில், இந்திய நாட்டிலுள்ள கனடா தூதர்களை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. கனடாவிற்கான இந்திய தூதர்கள் 21 பேர் இருந்து வந்த நிலையில், இந்தியாவிற்கான கனடா தூதர்கள் 62 பேர் உள்ளனர். இதில் 41 தூதர்கள் மத்திய அரசின் உத்தரவின்படி, வெளியேறினர்.
இந்த எண்ணிக்கையை சரிசமமாக நீடிக்க வேண்டும் என்றும், அதிக எண்ணிக்கையில் தூதர்கள் இருப்பதால் நாட்டின் முக்கிய முடிவுகளை தீர்மானிக்க இயலாத சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்பட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டது, இந்தியா. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியா இப்படி நாட்டின் தூதர்களை குறைப்பது சர்வதேச சட்ட மீறல் என்று கூறியது.